திமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

0
172

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கில், தங்களது முழு ஆதரவை அதிமுகவுக்கு அளிப்பதாக திமுக கட்சித் தலைவர்  ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார். 

அதன்பின் அதிமுக மத்திய அரசோடு இணைந்து இரட்டை வேடமிட்டு நடித்து வருவதாக குற்றம்சாட்டினார். மத்திய அரசிடம் உறுதியாக பேசுவதற்கு அதிமுக அரசு பயப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பினார். 

அதைத்தொடர்ந்து தற்போது அரசு மாணவனுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தர வலியுறுத்தி திமுக கட்சி சார்பில் ஸ்டாலின் அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார். அதுமட்டுமன்றி சமீபத்தில் அவர் பேட்டியில் கூறியது என்னவென்றால் : “மருத்துவ படிப்பில் அரசு மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு கிடைக்கும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் நீட் தேர்வை ரத்து செய்வதற்காக மட்டுமே சட்டசபையில் கொண்டுவந்த மசோதாக்களுக்கு தான் சம்மதம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். இன்னும் 6 மாத காலத்திற்கு பிறகு அனைத்தும் மாறிவிடும் என்றும் நீட் தேர்வு முற்றிலுமாக இருக்காது என்ற உறுதியையும், மாணவச் செல்வங்களின் மருத்துவ கனவு கனிந்து நனவாகி, நலன் பெருகும்” என்றும் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்!
Next articleதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனம்… ஆனால் ஒரு கண்டிஷன்!!