பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுகவினர்! திருத்துறைபூண்டியில் பரபரப்பு!

Photo of author

By Sakthi

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற கும்மிடிப்பூண்டி நாகராஜ கண்டிகை என்ற ஊரை சார்ந்த நபர் கார்த்திக் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், இன்று காலை கார்த்திக் வழக்கம் போல் தன்னுடைய விவசாய நிலத்திற்கு போய் இருக்கின்றார்.

அவர் விவசாய நிலத்திற்கு போகும் வழியில் அவரை இடைமறித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் முரளிதரன் , தாஸ், கிருஷ்ணராஜ் மற்றும் அஜித் குமார் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து கார்த்திக் அவர்களை சரமாரியாக அடித்து உதைத்து இருக்கிறார்கள்.

 இதுதொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், கார்த்திகை அந்த கும்பலிடமிருந்து மீட்டு அந்த பகுதியை சார்ந்த மக்கள் சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த காணொளி காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி இருக்கின்றது. இந்த நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து இருக்கிறது.