திமுக இளைஞரணி செயலாளராக, திமுக தலைவர் ஸ்டாலின் மகன் மற்றும் நடிகரான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று நேற்றுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்து,இரண்டாவது ஆண்டிணை அவர் தொடங்குகிறார்.தற்பொழுது கொரோனா காலம் என்பதால் இரண்டாம் ஆண்டு விழாவின் நிகழ்ச்சிகள் எதுவும் பெரிதாக நடத்துவதற்கும் வாய்ப்பில்லை.அதேபோன்று யாரையும் கூட்டமாக சந்திப்பதற்கும் தற்போது சூழல் சரியாக அமையவில்லை என்பதால்
உதயநிதி கட்சியில் முக்கிய நபர் என்பதை காட்ட வேண்டும் என்பதற்காக
“சமூக வலைத்தளத்தில் ஒட்டுமொத்த திமுக மாவட்ட,மாநில நிர்வாகிகள்,எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என அனைவரும் உதயநிதிக்கு தொடர்ச்சியாக வாழ்த்து சொல்லவேண்டும் என
கட்சியின் தலைமையில் இருந்து அனைத்து மாவட்ட மாநில நிர்வாகிகளுக்கும் நேற்று காலை தகவல் பறந்ததாக கூறப்படுகிறது.
இதில் திமுக ஐடி விங் ஊழியர்களும் இதில் களமிறங்க, இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் ட்ரென்ட் ஆக ஆரம்பித்தார்.
ஆனால் அதே நேரத்தில் நேற்று
#JusticeForSasikala என்ற ஹேஸ்டேக் ஆனது பொதுமக்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது.இந்த விவகாரம் உதயநிதிக்கு ட்ரெண்ட் செய்த திமுகவிற்கும் பலத்த பின்னடைவை கொடுத்தது.
திமுக இளைஞர் அணியை சேர்ந்த இருவர் அந்த பொண்ணை 4 வருடங்களாக பாலியல் சித்ரவதை செய்து அவருடைய மரணத்திற்கு காரணமாக இருந்தார்கள் என்று செய்தி
பரவியது.இதுதிமுகவிற்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி
திமுக இளைஞரணி நிர்வாகி மீது திமுக நடவடிக்கை எடுக்குமா? இளைஞரணி நிர்வாகி மீது உதயநிதி நடவடிக்கை எடுப்பாரா? சாத்தான்குளம் சென்ற உதயநிதி செய்யூர் செல்வாரா என்று அடுக்கடுக்கான கேள்விகளும், விமர்சனங்களும் எழ ஆரம்பித்த நிலையில்
நேற்று மாலை அந்தப்பெண்ணின் இறப்பிற்கு அவர்கள் காரணம் என்று உறுதி செய்யப்பட்டால் காவல்துறையினர் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அவரை இளைஞரணி பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
சாத்தான்குளம் இ பாஸ் விவகாரத்தில் சிக்கிய உதயநிதியை ட்ரெண்டிங் செய்ய வேண்டும் என்று திமுகவினர் நினைத்தனர்.ஆனால் இந்த சம்பவம் அவரை ட்ரெண்டிங்கில் இருந்து பின்னடைவு செய்தது மட்டுமின்றி, குற்றம் செய்தவர்களின் மீதான திமுக தலைமையின் நடவடிக்கையும் மக்களிடையே பலத்த அதிருப்தியை கொடுத்துள்ளது.