DMK: துணை முதல்வர் உதயநிதி அணியும் திமுக கொடி பொறித்த டி ஷர்ட் அணிவதற்கு இடைக்கால தடை விதிக்கும் படி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் துணை முதல்வர் ஸ்டாலின் அணியும் ஆடையை சுட்டிக்காட்டி பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதில் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் தனது கட்சி கொடி பொறித்த டி ஷர்ட் அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மக்களின் அரசாக இருக்கும் பொழுது எப்படி தங்களின் கட்சியை விளம்பரபடுத்தும் விதமாக இதனை போட்டு வரலாம், இது அணிந்து மேற்கொண்டு அரசியல் சார்ந்த பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடிகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுமட்டுமின்றி அந்த மனுவில், அரசின் பொது நலத்திட்டங்களை கொடுக்கும் பொழுது இவ்வாறு அணிந்தால் அவர்களின் கட்சி சார்பில் வழங்குவது போல காணப்படும். இது மிகவும் தவறானது, அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கென்று ஆடை கட்டுப்பாடு இருக்கும் பொழுது துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் பின்பற்றாதது சட்ட விரோதமானது எனவும் கூறியுள்ளார்.
மேலும் இனி வரும் நாட்களின் தனது கட்சி கொடி பொரித்த ஆடையை உதயநிதி அணியாமலிருக்க இடைகால தடை போட வேண்டும். மேற்கொண்டு அரசியல் தலைவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆடை கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கொண்டு வர வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கையாக வைத்துள்ளார்.