கலையிழந்த தேர்தல் களம்! சோகத்தில் மக்கள் காரணம் என்ன தெரியுமா?

0
98

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது ஆங்காங்கே முக்கிய தலைவர்கள் எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் என்னதான் தமிழகம் முழுவதும் தேர்தல் வந்துவிட்ட காரணத்தால், பரபரப்பாக காணப்பட்டாலும் இந்த தேர்தலில் ஒரு மிகப்பெரிய குறை மற்றும் வெற்றிடம் இருக்கிறது என்பதே உண்மை.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதிலும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் தன் பங்கிற்கு தமிழகம் முழுவதிலும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார். எதிர்கட்சியான திமுக தமிழக மக்களுக்கு பெரிய அளவில் எதுவும் செய்து விடவில்லை என்றாலும் அதிமுகவை தமிழகம் முழுவதிலும் குறைகூறிக் கொண்டே இருக்கிறது. அந்த நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றாலும் மக்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்து வரும் எங்களுடைய அரசை குறை கூறுவதையே ஸ்டாலின் வழக்கமாக கொண்டிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

என்னதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செல்லும் இடங்களிலெல்லாம் ஆளும் கட்சி உடைய சாதனைகளையும் திட்டங்களையும் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தாலும் அதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தாலும் கூட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாக்கு சேகரிக்கும் முறை எல்லோருடைய மனதிலும் தோன்றி மறைகிறது.

அவருடைய நேர்த்தியான பேச்சு, மக்களோடு மக்களாக பழகும் விதம் மற்றும் எதிர்வரும் தேர்தலில் எதிர்க்கட்சியான திமுகவை தோற்கடிக்க வேண்டும் நீங்கள் செய்வீர்களா என்று கேட்கும் அந்த அதிகார தோரணை, போன்றவை தற்போது இருக்கும் தேர்தல் களத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கி இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

அதேபோல இப்படியெல்லாம் கூட தமிழக பேசமுடியும் என்று தெரிவிக்கும் வகையில், மேடைகளில் உரையாற்றும் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி தமிழ் பேசும் விதம் தமிழில் அவருக்கிருந்த புலமை அதோடு மேடை பேச்சுகளில் வெளிப்படும் நகைச்சுவை போன்றவை இந்த தேர்தலில் ஒரு மிகப்பெரிய ஏக்கத்தை கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் திமுகவின் தலைவர் கருணாநிதி ஆகியோர் அரசியல் களத்தில் இருந்த சமயத்தில் கருணாநிதிக்கு கூட்டம் கூடுகிறதோ இல்லையோ முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான மக்கள் தலைவர்களுக்கு இடையே வெள்ளை வேனில் நின்று கொண்டு கம்பீரமாக உரையாற்றும் அந்த தோரணை இன்றளவும் தமிழக தாய்மார்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

என்னதான் தற்போது அதிமுகவிற்கு பொதுமக்களிடையே வரவேற்பு இருந்தாலும் கூட அந்த சிம்மக்குரல் இந்த பிரச்சார மேடையில் கேட்கவே இல்லையே என்ற ஏக்கம் ஒவ்வொரு தாய்மார்களின் மனதிலும் இருந்துவருகிறது.

லட்சோப லட்ச மக்கள் இடையே உரையாற்றினாலும் அந்த கூட்டம் அனைத்தும் பெண்கள் கூட்டமாக தான் இருக்கும் ஏனென்றால், அவருடைய பேச்சைக் கேட்பதற்கு தமிழக மக்களில் பெண்களில் பெரும்பாலானோர் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு இருவரும் சக்திகள் இந்த தேர்தல் களத்தில் இல்லாமல் இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வருவது ஒரு மாபெரும் குறையாகவே காணப்படுகிறது.

Previous articleசற்று முன்!! ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தடை உத்தரவு!
Next articleவிடாது தொரத்தும் கொரோனா! ஒரே நாளில் 251 பேர் உயிரிழப்பு!