Erode By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக,பாஜக போட்டியிடுவது குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவெரா மற்றும் இ வி கே எஸ் இளங்கோவன் மறைவிற்குப் பிறகு மூன்றாவது முறையாக இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் போட்டியிடப் போகிறார்கள் யார் நிறுத்தப்படுவார் என்று கேள்வி எழுந்து வருகிறது.
சட்டமன்ற தேர்தல் வருவதற்கு ஒரு வருடம் இருக்கும் பட்சத்தில் இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடிவிட்டால் அடுத்த கட்ட தேர்தலை சந்திப்பதற்கு எளிமையாக இருக்கும் என ஒரு சில கட்சிகள் எண்ணுகின்றனர். மறுபுறம் தோல்வி அடைந்து விட்டால் இதுவே பாதகமாக அமைந்து விடும் என்றும் எண்ணி இந்த தேர்தலை புறக்கணிக்கவும் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இவ்வாறு இருக்கும் நிலையில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுமா? அல்லது திமுக தங்களது வேட்பாளரை நிற்க வைப்பாரா என்ற போட்டியும் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த தேர்தலின் பொழுது கொள்கை பரப்பு துணை செயலாளர் சந்திரகுமார் வாய்ப்பு கேட்ட நிலையில் அதை மறுத்து விட்டனர். இம்முறை இவருக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்று திமுக மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
அதேபோல அதிமுக, ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வியை சந்தித்து வரும் பட்சத்தில் இதில் பங்கேற்கலாமா என்பது குறித்து ஆலோசனை செய்வதாக கூறியுள்ளார். குறிப்பாக காங்கிரஸ் போட்டியிட்டால் கட்டாயம் நாம் போட்டியிடலாம் அதுவே திமுக போட்டியிடும் பட்சத்தில் நாம் புறக்கணித்து விடலாம் என்று எண்ணத்தில் எடப்பாடி உள்ளாராம்.
அதேபோல பாஜகவும் அதிமுக புறக்கணித்து விட்டால் அவர்களின் வாக்கு வங்கியும் சேர்த்து கவரும் வகையில் ஒரு நபரை இறக்கி வெற்றி பெற வேண்டும் என மும்பரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.