திமுகவின் முக்கிய 6 அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட தடை! தலைமை செயலகத்திற்கு பறந்த அதிரடி கடிதம்!
திமுக முன்னாள் அமைச்சரும் துணைப் பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி கட்சியை விட்டு விலகுவதாக தற்பொழுது அறிவித்துள்ளார். இது அரசியல் சுற்றுவட்டாரங்களில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஏனென்றால் கருணாநிதி ஆட்சியில் இருந்த பொழுதே அவர் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 2009 ஆம் ஆண்டு எனது நாடாளுமன்ற உறுப்பினர் பனிக்காலம் முடிந்த பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். கட்சிக்கு உண்டான பணிகளை செய்வது மட்டுமே எனது தலையாய கடமையாக இருக்கும். இவ்வாறு முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்திருந்தார். அதேபோல கருணாநிதியின் மறைவுக்கு பிறகு ஸ்டாலினை முதல்வராக்குவதற்கான கழகப் பணிகள் அனைத்தையும் செய்து வந்தார்.
தற்பொழுது நடந்து முடிந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சுப்புலட்சுமி ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். இவர் பல ஆண்டுகளாக கட்சியில் இருந்து வருகிறார், இதை பிடிக்காத சில திமுக நிர்வாகிகள் திட்டம் போட்டு இவர் வெற்றிபெறக் கூடாது என தோற்கடித்துள்ளனர். இது குறித்தும் சுப்புலட்சுமி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதாக கூறுகின்றனர். ஆனால் அதனை ஸ்டாலின் கண்டு கொள்ளாமலே இருந்ததுள்ளர். இதனை கண்டு கடுப்பான சுப்புலட்சுமியின் கணவர், இணையத்தில் திமுகவை எதிர்த்து பல பதிவுகளை போட்டு வந்தார். திமுக ஊழலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு வழங்குவதாகவும் கூட தெரிவித்தார்.
இவ்வாறு இருக்கையில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி அவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். அதனால் பதவியில் இருந்தும் கட்சியிலிருந்தும் விலகுகிறேன் என்ற கடிதத்தை ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதிஸ்டாலினுக்கு அனுப்பி வைத்தார். இந்த கடிதத்தின் மூலம் அரசியல் சுற்றுவட்டாரங்களுக்கு பல உண்மைகளை சொல்லாமல் சொல்லியுள்ளார். கருணாநிதி மறைவுக்கு முன்பே இனி போட்டியிட மாட்டேன் எனக் கூறிய சுப்புலட்சுமி, ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக கழகப் பணிகளை செய்துள்ளார். அவ்வாறு கழகப் பணிகளை செய்த சுப்புலட்சுமி தற்போது மதிக்காமல் உள்ளது. அதனால் தான் தற்பொழுது அவர் விலகுவதாக கூறியிருப்பது போல் தெரிகிறது.
சுப்புலட்சுமி ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி அனுப்பிய கடிதத்திற்கு தற்பொழுது வரை தலைமை அலுவலகத்தில் இருந்து எந்தவித பதிலும் இல்லை. ஏன் இதனை திமுக சிறிதளவு கூட கண்டுக்கவில்லை? என்பதில் அதிக சந்தேகம் எழுகிறது. தானாகவே சுப்புலட்சுமி கட்சியை விட்டு விலகினால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் அவரது கோரிக்கையை ஏற்று கட்சியை விட்டு விலக நேர்ந்தால் உட்கட்சி பிரச்சனை என்று பெயராகிவிடும். இதனால் திமுக கண்டுக்காமல் உள்ளதாக கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி பாஜகவில் சுப்புலட்சுமி இணைய போவதாகவும் தகவல் வெளிவந்த நிலையில், திமுக அமைதி காக்கலாம் என்றும் கூறுகின்றனர். இவர் எழுதிய விலகல் கடிதத்தில் மேலும் ஆறு அமைச்சர்கள் குறித்தும் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர். திமுக கட்சியின் மூத்த அமைச்சர்களான எ.வ வேலு, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், ரகுபதி, முத்துசாமி, ராஜா கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய ஆறு அமைச்சர்களுக்கும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்குமாறு கூறியுள்ளார். ஏனென்றால் இவர்களும் தன்னை போலவே ஆரம்ப கட்ட காலத்தில் இருந்தே திமுகவில் பயணித்து வருகின்றனர்.
தற்பொழுது அனைவருக்கும் 71 வயதை கடந்து விட்டது. மீண்டும் கடந்த ஐந்து ஆண்டுகளை கழித்து சட்டமன்ற தேர்தல் வரும்பொழுது இவர்களால் முழுமூச்சுடன் பிரச்சாரத்தில் இறங்கி பணியாற்ற இயலாது. அதனால் இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காமல், அதற்கு மாற்றாக கட்சியில் பணியாற்றுவதற்கு மட்டும் உண்டான பணிகளை தரலாம். நீர்வளத்துறை அமைச்சராக உள்ள துரைமுருகனுக்கு 84 வயதாகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவரால் முழுமையாக தேர்தல் பிரச்சாரத்தை நடத்த முடியவில்லை. நாளடைவில் சட்டமன்றத் தேர்தல் வரும் பொழுது இந்த ஆறு அமைச்சர்களுக்கும் இதே நிலை தொடரும். இதனால் சில தொகுதிகளில் தோல்வியை கூட அடையலாம். இதனையெல்லாம் கணித்து திமுக இந்த ஆறு மூத்த அமைச்சர்களுக்கு கட்சி பணியை மட்டும் வழங்க வேண்டும். இவ்வாறு சுப்புலட்சுமி தனது விலகல் கடிதத்தில் அந்த ஆறு அமைச்சர்களுக்கு குறிப்பிட்ட கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.