
DMK: திமுக என்றாலே குடும்ப அரசியல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன் பல பேட்டிகளில் எனது மகன் அரசியலுக்கு வர மாட்டார் என்று தான் கூறினார். ஆனால் அவர்கள் திட்டமே மகனை சினிமா திரையில் நுழைய வைத்து முக விளம்பரம் எடுத்த பிறகு அரசியல் பயணத்தில் சேர்த்துக் கொள்வது தான். அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அவரை சேப்பாக்கம் தொகுதியில் நிற்க வைத்து அழகு பார்த்ததோடு தற்போது அவருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
அதன் வழியே தற்போது இன்ப நிதியையும் பயணிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். அந்த வகையில் சில தினங்களாக இணையதளம் என்றும் இன்பநிதி யின் ஆக்டிங் ஸ்கூல் வீடியோ தான் உலாவி வருகிறது. அதுமட்டுமின்றி இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனுஷும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனுஷ் நடிப்பில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்திருக்கும் இட்லி கடை படமானது அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது.
இதன் தியேட்டரில் இசை ரெட் ஜெயன்ட் வாங்கியுள்ளதோடு இதனை உதயநிதி மகன் இன்ப நிதி பெயரில் வெளியிட போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. இது ரீதியாக தனுஷ் இன்பநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உதயநிதியும் ஆரம்பத்தில் ரெட் ஜெயன்ட் மூலம் தான் சினிமாவுக்குள் நுழைந்து நாளடைவில் அரசியலுக்குள் இடம் பிடித்தார். இதன் மூலம் திமுக தனது வாரிசு அரசியலை அடுத்த தலைமுறைக்கும் தொடர்வதை பார்க்க முடிகிறது. வரப்போகும் தேர்தலில் கூட இன்பநிதிக்கு வாய்ப்பு தரலாம் என பேசுகின்றனர்.