அன்புமணி ராமதாஸ் பெயருக்கு களங்கம் விளைவிக்க திமுக போட்ட பலே திட்டம்!! வெட்ட வெளிச்சமாக்கிய காணொளி!!

Photo of author

By Rupa

அன்புமணி ராமதாஸ் பெயருக்கு களங்கம் விளைவிக்க திமுக போட்ட பலே திட்டம்!! வெட்ட வெளிச்சமாக்கிய காணொளி!!

Rupa

Updated on:

DMK's plan to tarnish Ramdas's name!! Video that made the cut!!

பெஞ்சால் புயலால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெருமளவில் பாதிப்படைந்தது. இதிலிருந்து மீண்டு வர வணிகர்களுக்கு சிறு மற்றும் குறு வங்கி கடனுதவி செய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறு இருக்கையில் எதிர்க்கட்சி எனத் தொடங்கி பலரும் தங்களது நிதியுதவியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர்.

இந்த வரிசையில் பாமக தலைவர் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்துள்ளார். இதில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவம் அளிக்கப்படும். அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்த காரணத்தினால் அவர் சில நபர்களுக்கு மருத்துவரோடு மருத்துவாரக அமர்ந்து சிகிச்சை அளித்தார்.

அதுகுறித்த புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலானது. அதில் அவர் ஒரு சிறுவனுக்கு சோதனை செய்யும் பொழுது ஸ்டெதஸ்கோப்பை காதில் போடாமல் சிகிச்சை அளிப்பது போன்றான புகைப்படம் வெளியாகியது. இதை பார்த்த பலர் எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனால் இது அனைத்தும் பின்னணியிலும் திமுக இருப்பது  தெரியவந்துள்ளது.

அன்புமணி ராமதாஸ் அவர்கள் மருத்துவ நிகழ்ச்சி தொடங்கி வைத்த காணொளியானது மக்கள் தொலைக்காட்சி என பலவற்றிலும் வெளியிட்டுள்ளனர். அதனில் பார்க்கும் பொழுது அங்கு இருக்கும் மருத்துவர், ஒரு சிறுவனை அழைத்து இவனை ஒரு முறை செக் பண்ணுங்க எனக் கூறியுள்ளார்.

உடனே அன்புமணி, இங்கே வாடா எனக் கூறி விளையாட்டாக ஸ்டெதஸ்கோப்பை காதில் வைக்காமல் சோதனை செய்து பிறகு முறையாக சிகிச்சை அளித்துள்ளார். இவர் விளையாட்டாக தான் இவ்வாறு செய்தார் என்பது நேரலை வீடியோவில் பதிவாகியுள்ளது. சமீபகாலமாக திமுக வை சரமாரியாக தாக்கி பேசி வருவதால் பாமக தலைவரின் பெயரை கெடுக்க ஊடகங்களுக்கு சன்மானம் கொடுத்து இந்த வேலையை செய்ய வைத்ததாக அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றனர்.