திமுக-வின் ரகசிய பட்டியல்! கூட்டணி கட்சிகளுக்கு பதவி கிடைக்குமா?

Photo of author

By Rupa

திமுக-வின் ரகசிய பட்டியல்! கூட்டணி கட்சிகளுக்கு பதவி கிடைக்குமா?

தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள் அனைவரும் எந்த ஆட்சி அமைக்கப்போகிறது என தேர்தலின் முடிவுகளை எண்ணி ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே பல கருத்து கணிப்பில் திமுக தான் ஆட்சி அமைக்கும் என கூறி வந்தனர்.இந்த கருத்து கணிப்பால் அதிமுக பல குழப்பத்தில் இருந்தது. இவ்வாறு நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் தேர்தலின் முடிவுகள் மே 2-ஆம் தேதி வெளிவந்தது.

அதிமுகவினர் பலர் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எண்ணிய நிலையில் திமுக மட்டும் 133  இடங்களில் பெருமான்மையாக வெற்றியை தட்டியது.கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மொத்தமாக திமுக 159 இடங்களில் வென்றுள்ளது.அதே அதிமுக தனியாக 66 தொகுதிகளில் வெற்றியை தட்டியது.கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மொத்தம் 75 இடங்களில் வென்று பின்டைவை சந்தித்தது.

தற்போது தமிழக முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திமுக தலைவர் ஸ்டாலின்.அவர் வரும் 7-ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்.அதனையடுத்து நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏ-க்களுடன் ஓர் கூட்டம் அமைத்து ஆலோசனை நடத்தினார்.இதில் 133 எம்எல்ஏ-க்கள் கலந்துக்கொண்டனர்.

அதனையடுத்து அனைத்து திமுக வேட்பாளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது தான் அமைச்சர்கள் பட்டியல்.இதில் யார் பெயர்கள் இருக்க போகிறது என பெருமளவு எதிர்பார்ப்பு காணப்படுகிறது.இதனிடையே சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பட்டியல் வெளியாகி சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.ஏனென்றால் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெயர்கள் அமைச்சர்களாக இருக்காமல் வெற்றி பெறாத வேட்பாளர்களின் பெயர்கள் அமைச்சர் பட்டியலில் இருந்தது.ஆனால் அது போலியான தகவல் என திமுக கூறியது.

அதற்கடுத்து திமுக-விற்கு தேர்தல் டெக்னிக்குகளை வகுத்துக்கொடுத்த ஐபேக் டீம் ஒரு பட்டியலை தயார் செய்து ஸ்டாலினிடம் கொடுத்துள்ளது என அரசியல் வட்டாரங்களில்,பல பேச்சுக்கள் வலம் வந்தது.அந்தவகையில் கட்சி வேட்பாளர்கள் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் தங்களின் பெயர்களை பட்டியலில் போடும்படி பரிந்துரை செய்து வருகின்றனர்.அதற்கு அவர் கூறியது,தேர்தலின் போது ஸ்டாலின் அவர்கள் வேட்பாளர் பட்டியலை ரகசியம் காத்தி அவரே வெளியிட்டார்.அதே போல அமைச்சர்கள் பட்டியலையும் முக ஸ்டாலின் வெளியிடுவார்.அப்பட்டியல் தற்போது ரகசியமாக உள்ளது என்று கூறியுள்ளார்.