ADMK DMK: அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் இருக்கும் பட்சத்தில் அதில் பெரும் புள்ளியாக பார்க்கப்படுவது மாஜி அமைச்சர் செங்கோட்டையன் தான். எம்ஜிஆர் காலத்திலிருந்து தற்போது வரை இருக்கும் மூத்த நிர்வாகியும் இவர்தான். சமீபத்தில் இவருக்கும் எடப்பாடிக்கும் உரசல் போக்கு இருக்கவே மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டனர். அச்சமயத்தில் இவருக்கு ஆதரவாக பலர் நின்றனர்.
மேலும் மாற்றுக் கட்சியினர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நினைத்தது. அதன்படி அதிமுகவை விட்டு வெளியேறி எங்களது கூட்டணியில் இணைந்து கொள்ளுங்கள் என்றும் கூறியது. ஆனால் செங்கோட்டையன் பாஜகவை வைத்து அதிமுகவில் காய் நகர்த்தலாம் என திட்டமிட்டருந்தார்.
அதற்கு முன்பாகவே இவர்களின் கூட்டணி உறுதியாகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதனால் இவரது எண்ணம் பழிக்காமல் போனது. இதனை தொடர்ந்து அதிமுகவின் மூத்த நிர்வாகியான அன்வர் ராஜா, மைத்ரேயன் உள்ளிட்டோர் தற்சமயம் திமுகவில் இணைந்துள்ளனர். இது அதிமுகவிற்கு பெரும் இழப்பீடு தான்.
இதேபோல செங்கோட்டையன் திமுக பக்கம் இணைய போவதாகவும் மேற்கொண்டு அவரோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இணைவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோபிசெட்டிபாளையத்தில் இவரது அத்தியாயம் என்பது யாரும் நிரப்ப முடியாத ஒன்று. இப்படிப்பட்ட இவரை திமுக தன் வசப்படுத்தி கொங்கு மண்டல வாக்குகளை கவர எண்ணுகிறது.
ஏனென்றால் கிட்டத்தட்ட ஒன்பது முறைக்கும் மேல் அதே தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்துள்ளார். இதனை உடைக்கவே தற்போது திமுக திட்டமிட்டுள்ளது. இவரும் உட்கட்சி மோதல் போக்கால் மாற்று கட்சிக்கு செல்லலாம் என்ற சிந்தனையில் உள்ளதாக கொங்கு மண்டலங்கள் தெரிவிக்கின்றனர்.