தோல் வியாதிகள் அனைத்தும் சரியாக வேண்டுமா? நெல்லிக்காய் பொடியை இப்படி பயன்படுத்துங்க! 

Photo of author

By Sakthi

தோல் வியாதிகள் அனைத்தும் சரியாக வேண்டுமா? நெல்லிக்காய் பொடியை இப்படி பயன்படுத்துங்க!
தோல்களில் அரிப்பு, சொறி, சிரங்கு ஆகியவை ஏற்படுவது சாதாரணமான ஒன்று. அதற்கு காரணம் நாம் நம்முடைய சருமத்தை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்பதுதான்.
நம்முடைய வீட்டில் நான்கு பேர் இருப்பின் அவர்கள் அனைவரும் தனித்தனியாக குளிக்கும் சோப்பை பயன்படுத்த வேண்டும். மாற்றாக அனைவரும் ஒரே சோப்பை பயன்படுத்தினால் தோல் வியாதிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த தோல் வியாதிகள் அலர்ஜிகள் பலவும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தோல் வியாதிகள் ஏற்பட்டால் தற்போதைய காலத்தில் அதை குணப்படுத்த ஆயில்மெண்ட், அதற்கென்று விற்பனை செய்யப்படும் சோப் ஆகியவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு விலையே இல்லாமல் பணமே செலவு இல்லாமல் இது போன்ற வியாதிகளை குணப்படுத்த இயற்கை மருத்துவத்தில் பல வழிகள் இருக்கின்றது.
அந்த வகையில் தோல் நோய்களை குணப்படுத்தும் எளிமையான இயற்கையான வழிமுறை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தோல் நோய்களை குணப்படுத்த நாம் நெல்லிக்காயை பயன்படுத்தலாம். அது எவ்வாறு என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* நெல்லிக்காய்
* மஞ்சள் தூள்
செய்முறை…
முதலில் நெல்லிக்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி அதை வெயிலில் காய வைக்க வேண்டும். நெல்லிக்காய் துண்டுகள் நன்கு காய்ந்த பின்னர் இதை மிக்சி ஜாரில் போட்டு பொடியாக்கி கொள்ள வேண்டும். கடைகளில் கூட ரெடிமேடாக நெல்லிக்காய் பொடி கிடைக்கும்.
ஆனால் அதில் ஒரு சில கெமிக்கல் கலந்திருப்பார்கள். எனவே நாம் இயற்கையான முறையில் நெல்லிக்காய் பொடியை மேற்கண்டவாறு தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். தோல் வியாதிகளை குணப்படுத்தும் பொடி தயாராகி விட்டது.
இந்த பொடியை நாம் குளிக்கும் பொழுது உடலில் தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இந்த பொடியை உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் வியாதிகள் அனைத்தும் சரியாகி விடும்.