ஆண்களே தாடி முடி காடு மாதிரி வளரணுமா? இந்த ஹோம் ரெமிடியை ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Rupa

 

ஆண்களுக்கு அழகே அவர்களுக்கு மீசை மற்றும் தாடை தான்.பெண்களுக்கு தாடி மீசை வைத்திருக்கும் ஆண்களை தான் பிடித்திருக்கிறது.இன்று ஆண்கள் பலர் தாடி மீசையை அடர்த்தியாக வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.இருப்பினும் அனைவராலும் அடர்த்தியான தாடி மீசையை வளர்க்க முடிவதில்லை.

தாடி முடி குறைவாக உள்ள ஆண்கள் அதை நன்கு வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.

1)விளக்கெண்ணெய்

தாடி முடியை அடர்த்தியாக வளர வைப்பதில் விளக்கெண்ணெய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது.தினமும் தாடி முடிகளுக்கு விளக்கெண்ணைய் வைத்து மசாஜ் செய்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

1)ரோஸ்மேரி ஆயில்
2)ஆப்பிள் சீடர் வினிகர்
3)கற்றாழை ஜெல்

ஒரு பவுலில் இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல்,ஒரு தேக்கரண்டி ரோஸ்மேரி ஆயில் மற்றும் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை தாடி முடிகளுக்கு அப்ளை செய்து வந்தால் அவை அடர்த்தியாக வளரும்.

1)தேங்காய் எண்ணெய்
2)ஆலிவ் எண்ணெய்
3)வைட்டமின் ஈ ஆயில்

ஒரு பவுலில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்,ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு வைட்டமின் ஈ ஆயில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை தாடி முடிகளுக்கு அப்ளை செய்து வந்தால் அவை அடர்த்தியாக வளரும்.

1)விளக்கெண்ணெய்
2)தேங்காய் எண்ணெய்

ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை ஒன்றாக மிக்ஸ் செய்து தாடி முடிகளில் ஊற்றி மசாஜ் செய்வதால் இறந்த செல்கள் நீங்கி இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.இதனால் தாடி முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

இதை தவிர்த்து ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளுதல்,முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளல் போன்ற பழக்கங்கள் மூலம் தாடி முடி வளர்ச்சியை அதிகரிக்க முடியும்.