கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார் .அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் பொது மக்களாலும் அரசியல் கட்சி தலைவர்களும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
அத்துடன் பொதுமக்கள் விஷயத்தில் அவர் காட்டும் அக்கறை பொதுமக்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது, அதோடு ஸ்டாலின் தற்போது தான் முதன்முதலாக முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறார் என்பதால் அவர் பொது மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக, இப்படி மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் தற்போது வரையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய பல பிரச்சனைகள் சம்பந்தமாக முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு கடிதங்கள், இ-மெயில்கள் என்று அனைத்தும் சென்று கொண்டிருக்கின்றன.
இப்படி இருக்கின்ற சூழ்நிலையில், முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு மனுக்களை கொடுப்பதற்கு பணம் கொடுத்து படிவம் எதுவும் வாங்குவதற்கான தேவையில்லை என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டுவரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்களிடமிருந்து வாங்கப்படும் மனுக்கள் குறித்த மாவட்டங்கள் மற்றும் துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலவச வீடு ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு வேண்டும் என்று தெரிவித்து நாள்தோறும் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை வழங்கி வருகிறார்கள்.
இப்படி முதலமைச்சரின் தனிப்பிரிவில் வழங்கப்படும் அனேக மனுக்கள் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் தான் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு வழங்கப்படவேண்டும் என்ற தவறான செய்தி சமீபத்தில் தமிழகம் முழுவதும் பரவியது.இதுகுறித்து நேற்றைய தினம் தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்ட இருக்கின்ற ஒரு அறிவிப்பில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு மனுக்களை வழங்க வருகை தரும் அனைத்து பொதுமக்களும் குறிப்பிட்ட படிவத்தை பணம் கொடுத்து வாங்கி மனுக்களை வழங்கி வருவதாகவும், செய்திகள் தமிழக அரசின் கவனத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆகவே முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை வழங்குவதற்கு எந்தவிதமான ஒரு குறிப்பிட்ட படிமமும் தமிழக அரசால் இதுவரையில் பரிந்துரைக்கப்படவில்லை அதோடு பொதுமக்கள் மனுக்களை வழங்க வேண்டுமென்றால் ஒரு வெள்ளைத்தாளில் தங்களுடைய கோரிக்கைகளை எழுதி அத்துடன் உரிய ஆவணங்களை நகலாக எடுத்து இணைத்து முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு வழங்கினாலே போதுமானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் உடைய தனிப்பிரிவில் பல முறைகளில் பெறப்படும் தபால் முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் மின்னஞ்சல் என அனைத்து மனுக்கள் மீதும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள ஒரே வரையிலான நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே தங்களுடைய கோரிக்கைகள் குறித்த மனுக்களை ஒரு குறிப்பிட்ட படிவத்தில் தான் மக்களாக வழங்கவேண்டும் என்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் பணம் கொடுத்து மனுக்களை வாங்கி வழங்க வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் விதத்தில் நாள்தோறும் நேரடியாக மனுக்களை வழங்குவதற்காக பொதுமக்கள் கூறுவதை தவிர்த்து இணையவழி சேவைகளைப் பயன்படுத்தி பொதுமக்கள் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.