ரேஷன் பொருட்கள்- கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!!

Photo of author

By Sakthi

TAMIL NADU:ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்க கூடாது, தமிழக அரசு நடவடிக்கை.

தமிழக அரசின் மானிய விலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாது, பொங்கல் பண்டிகையின் போது வேஷ்டி, புடவை மற்றும் கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. வீட்டு சமையலுக்கு தேவையான விலையில்லா அரிசி, மானிய விலையில் பருப்பு, சர்க்கரை,எண்ணெய், உப்பு , சாம்பார் பொடி,சோப்பு ,தீப்பெட்டி ,மசாலா பொடிகள், பெருங்காயம், என 30 க்கும் மேற்பட்ட மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில்தான் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. எனவே இதில் மீதமான மளிகை பொருட்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தது. எனவே இது போன்ற பொது மக்களிடம் கட்டாயபடுத்தி எந்த பொருளையும் விற்க கூடாது.

என்றும் அவ்வாறு பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவு வழங்கல் துறை சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அறிக்கை தமிழக அரசால் வெளியிடப்படும், மேலும் இது குறித்து அறிவிப்பு போஸ்டர்கள் நியாய விலைக் கடைகளில் ஒட்டப்படும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும் மீதம் உள்ள பொருட்களை திரும்ப அனுப்ப தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது போன்று நவடிக்கை எடுப்பது மூலம் தமிழக அரசால் நியாவிலை கடைகள் நேரடி கண்காணிப்பில் செயல்பட வேண்டும் எனபது மக்கள் கோரிக்கையாக இருக்கிறது.