சேலத்தில் 2 மையங்களுக்கு “சீல்” மக்களை பதட்டத்துக்கு ஆளாக்க வேண்டாம்- அமைச்சர்!

Photo of author

By Kowsalya

சேலம் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சி மருத்துவமனை மற்றும் சண்முக மருத்துவமனைகளில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

 

கொரோனா இல்லாமலே கொரோனா உள்ளது எனக்கூறி தவறான பரிசோதனைகளை கொடுத்த இரண்டு பரிசோதனை மையங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

அதை பற்றிய பேசிய அமைச்சர், சேலம் இரும்பாலையில் 500 ஆக்சிஜன் கொண்ட படுக்கைகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து பணி நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஐந்து நாட்களில் முதல்வர் அந்த அறிவிப்பை தெரிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.

 

அரசு மருத்துவமனைகளிலும் கொரோணா பரிசோதனை 5300க்கும் மேற்பட்ட சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்படுகின்றன. அதில் 11 -12 சதவீதம் மட்டுமே கொரோனா பாசிட்டிவ் வருகிறது.ஆனால் தனியார் மருத்துவமனைகளில் 1300 சாம்பிள்கள் செய்யப்படுகின்றன. 50 சதவீதத்துக்கும் மேல் கொரோனா பாசிட்டிவ் வருகின்றது.இந்த சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் பொழுது தனியார் மருத்துவமனைகள் தவறான முடிவுகளை வெளியிட்டது தெரியவந்தது. இதனால் சேலம் குறிஞ்சி மற்றும் சண்முகா மருத்துவ பரிசோதனை மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

இரும்பாலை மையத்தில், 230 படுக்கைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள, 270 படுக்கைகள் காலியாக உள்ளன. படுக்கைகள் இல்லை என தவறான தகவல்களை பரப்பி, மக்களை பதட்டத்துக்குள்ளாக்க வேண்டாம் என கூறினார்.