உள்ளாட்சித் தேர்தலில் நூதன முறையில் ஒட்டு கேட்ட நபர்! நாமக்கல்லில் பரபரப்பு!

Photo of author

By Sakthi

சென்ற மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் சமயத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில் தமிழக அரசுக்கு 5 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருக்கிறது ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திற்கு அருகே மேற்கு பட்டியை சேர்ந்த காந்தியவாதி என்று சொல்லப்படும் ரமேஷ் தியாகராஜன் என்பவர் நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார் வட்டாட்சியர் கோட்டை குமாரை சந்தித்த அவர், தமிழக அரசு மீது இருக்கும் கடனில் தன்னுடைய குடும்பத்தின் பங்கான 2.63 லட்சம் கடன் தொகைக்கு உரிய காசோலை அட்டையை வழங்கி பரபரப்பை உண்டாக்கினார்.

தற்சமயம் இவர் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் ஆறாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட இருக்கின்றார். இதற்காக அவர் சுவரொட்டி அச்சடித்து அந்த பகுதி முழுவதும் ஒட்டி இருக்கின்றார். அந்த சுவரொட்டியில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்து விடுவேன் ஆகவே எனக்கு மறந்தும் கூட பேருந்து சின்னத்தில் வாக்களித்து விட வேண்டாம் என்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

மாநில அரசு கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கும் சமயத்தில் திடீரென்று ஒருவர் இவ்வாறு ஒரு அதிரடி முடிவை எடுத்து தன் பங்கிற்கு ஆன கடன் தொகையை தமிழக அரசிற்கு வழங்கியிருப்பது பெரும் வரவேற்ப்பை பெற்றது.

ஆனால் இவரைப் போன்று நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களைத் தவிர்த்து சமூகத்தில் நல்ல நிலையில், இருக்கக்கூடிய நபர்கள் ஒவ்வொருவரும் தன் குடும்பத்திற்கான கடனை அடைத்து விடுமாறு அவரவர் குடும்பத்திற்கு உண்டான தொகையை முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி வைத்தால் மாநில அரசின் கடன் தொகையை ஒரு வருட காலத்திற்குள் அடைத்துவிடலாம் என்பதே நிதர்சனம்.