ஈசியாக சுக பிரசவம் ஆக இந்த டயட் முறையை பின்பற்றுங்கள்!!

Photo of author

By Sakthi

ஈசியாக சுக பிரசவம் ஆக இந்த டயட் முறையை பின்பற்றுங்கள்!!

Sakthi

Updated on:

ஈசியாக சுக பிரசவம் ஆக இந்த டயட் முறையை பின்பற்றுங்கள்!!

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அனைவரும் தங்களுக்கு சுக பிரசவ முறையில் குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவ்வாறு சுக பிரசவம் ஆக வேண்டும் என்றால் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் டயட் முறையை பின்பற்றுங்கள்.

 

கர்ப்பிணி பெண்கள் அனைவரும் அறுவை சிகிச்சை இல்லாமல் சுக பிரசவ முறையில் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என நினைத்து பலவிதமான நாட்டு மருந்துகளையும், மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்கிறார்கள். அதில் நாட்டு மருந்துகளை விட ஆங்கில மருந்துகள் பிரசவ காலத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

 

இவ்வாறு சுக  பிரசவம் ஆக வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் இந்த டயட் முறையை பின்பற்றுங்கள். மருத்துவரை கலந்தாலோசித்து இந்த டயட் முறையை பின்பற்றுங்கள்.

 

சுகப் பிரசவம் ஆக பின்பற்ற வேண்டிய டயட் முறை;

 

* கர்ப்பிணி பெண்கள் சுகப் பிரசம் ஆவதற்கு நார்சத்து மிகுந்த பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு நார்ச்சத்து அதிகம் உள்ள ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.

 

* சுக பிரசவம் ஆக வேண்டும் என்று நினைக்கும் கர்ப்பிணிப் பெண்கள் பாலையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பாலில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவு கிடைக்கின்றது. அது போல பால் சார்ந்த உணவு பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

* சுக பிரசவம் ஆக வேண்டும் என்று நினைக்கும் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் விட்டமின் ஏ சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு விட்டமின் ஏ சத்து உள்ள சக்கரைவள்ளி கிழங்கை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ளலாம்.

 

* கர்ப்பிணி பெண்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்றால் தினமும் கீரை வகைகளையும் தங்கள் உணவுகளோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

* சுக பிரசவம் ஆக வேண்டும் என்று நினைக்கும் கர்ப்பிணி பெண்கள் புரதச்சத்து உள்ள உணவு பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு புரதச்சத்து அதிக அளவு இருக்கும் முட்டையை கர்ப்பிணி பெண்கள் தங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.