ரயில்வே ஸ்டேஷன்களில் உணவுக்கு அதிக விலை வசூலிக்கிறார்களா? உடனே இந்த எண்ணுக்கு கால் பண்ணுங்க

0
229
Do they charge high prices for food at railway stations? Call this number immediately
Do they charge high prices for food at railway stations? Call this number immediately

ரயில்வே ஸ்டேஷன்களில் உணவுக்கு அதிக விலை வசூலிக்கிறார்களா? உடனே இந்த எண்ணுக்கு கால் பண்ணுங்க

சமீப காலமாக பேருந்து அல்லது ரயில் பயணங்களில் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் கூடுதல் விலையை கொடுப்பது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக ரயில் நிலையங்களில் குடிநீர் முதல் உணவு வகைகள் வரை அனைத்தும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த அவலத்தை பலரும் சாதாரணமாக கடந்து செல்கின்றனர்.அதில் சிலர் இது வழக்கமானது தான் என எண்ணி அவர்கள் கூறும் கூடுதல் விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். மற்றொரு பிரிவினர் ரயில் நிலையங்களில் கூடுதல் விலைக்கு விற்பார்கள் என குடிக்க தண்ணீர் முதற்கொண்டு சாப்பிடும் உணவு வரை வீட்டிலிருந்தே பார்சல் செய்து எடுத்து வந்து விடுகின்றனர்.

வெகு சிலரே இந்த அவலத்தை எதிர்த்து அவ்வப்போது கேள்வி எழுப்புகின்றனர். அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இனிமேல் ரயில் நிலையங்களில் யாரும் கூடுதல் விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. அதற்கான அறிவிப்பை தான் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு ரயில் நிலையங்களில் வழக்கமான கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்க, பயணிகளுக்கு உதவும் வகையில் புகார் எண்ணை ரயில்வே சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலமாக தேவையற்ற கூடுதல் விலையை செலுத்துவது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது, இந்த எண்ணை டயல் செய்து புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தேவையற்ற செலவுக்கு முற்றுப்புள்ளி வைக்க கீழ்க்கண்டவாறு புகார் அளிக்கவும்.

இரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டணமில்லா 1800111139 என்ற எண்ணிற்கு கால் செய்து உங்களது புகாரை அளிக்கலாம்.

மேலும் அதனை SMS மூலமாகவும் அனுப்பலாம், 9711111139 என்ற எண்ணிற்கு உங்களது புகாரை SMS செய்யுங்கள்.

உங்களது ஸ்மார்ட்போனில் இருந்து “புகார் மேலாண்மை அமைப்பு” (Complaint Management System) என்ற அமைப்புக்குள் சென்று உங்களது புகாரை ரெஜிஸ்டர் செய்திடுங்கள். புகாரைப் பதிவுசெய்த பிறகு, புகார் எண் உங்களது மொபைல் நம்பருக்கு வந்து சேரும். இதைப் பயன்படுத்தி நீங்கள் அந்த புகாரின் நிலைமையைக் கண்காணிக்கலாம்.

Previous articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! தன வரவும் மேம்படும் நாள்!
Next articleமரு தானாகவே கீழே விழ வேண்டுமா! அதன் மீது இதனை மட்டும் வையுங்கள்!