இவர்களுக்கு இனி அகவிலைப்படி உயர வாய்ப்பில்லை? மார்ச் 10ஆம் தேதி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள்!

0
268
Do they not have the opportunity to raise their prices? On March 10th, the employees involved in the great protest!
Do they not have the opportunity to raise their prices? On March 10th, the employees involved in the great protest!

இவர்களுக்கு இனி அகவிலைப்படி உயர வாய்ப்பில்லை? மார்ச் 10ஆம் தேதி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள்!

மத்திய அரசு  கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில்  விலைவாசி உயர்வை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஓராண்டிற்கு இரண்டு முறை உயர்த்தி  வழங்கப்படும். இந்நிலையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக வழங்கப்பட்டது.

அதனால் கோடிக்கணக்கான பணியாளர்களும் ஓய்வூதியதாரர்களும்  அகவிலைப்படியை  பெற  தகுதி பெற்றனர். இந்நிலையில் மத்திய அரசு அடுத்த சில தினங்களில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படியானது  தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் ஹோலி பண்டிகைக்கு பிறகு நான்கு சதவீதம் உயர்த்தி 42 சதவீதமாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

நாளை முதல் அகவிலைபடி  மற்றும்  பிட்மேட் காரணியை திருத்த அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஈடாக தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி முன்னதாகவே அகவிலைப்படையை எந்த அளவிற்கு உயர்த்த முடியுமோ அந்த அளவிற்கு உயர்த்தி உள்ளார் என தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் பட்ஜெட் தாக்களின் போது மாநில அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த அகவிலைப்படி உயர்வு தங்களுக்கு போதுமானதாக இல்லை என்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஈடாக தங்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும் எனவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு, தற்போது போராட்டத்திலும் ஈடுபட உள்ளனர். மேலும் வரும் மார்ச் 10ஆம் தேதி மாநில அரசு ஊழியர்கள் தரப்பில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது  எனவும் அறிவித்துள்ளனர்.

Previous articleசர்வதேச மகளிர் தினம் பெண்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்! குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் தேதி வெளியீடு?
Next articleஎடப்பாடியின் அவசர மீட்டிங்.. 13 பேரையும் ரௌண்டப் பண்ண பக்கா பிளான்!! சுக்குநூறாக உடையும் அண்ணாமலை!!