இதனைச் செய்யுங்கள் இனி உங்கள் இல்லற வாழ்க்கை இனிமையாகும்

0
148

இல்லற வாழ்க்கையிலும், உங்களை நேசிக்கும் ஒருவரிடம் இருந்தும் உங்களின் வாழ்க்கை  புரிதலற்ற வகையில் இருக்குமானால் நீங்கள் இதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக ஆண்களுக்கான,  நேசிப்பவர்களிடம் உங்களின் நேசிப்பு ஆழமானது என்பதைப் பறைசாற்றும்.

 

பெண்ணால் நேசிக்கபட்டால் அவள் உங்களை கடுமையாக சோதனைக்கு உட்படுத்துவாள்.

 

அப்படி எதுவும் செய்யாமல் சமத்துவமாக பழகினால் நீங்கள் அவளுக்கு ஸ்பெசல் எதுவும் கிடையாது. உலகில் வாழும் மற்றொரு மானிடன்…அவ்வளவுதான்

 

மற்ற ஆண்கள் அவளை சமத்துவமாக நடத்தவில்லை என்றால் அவர்களுக்கு டின் கழண்டுவிடும்.

 

நீங்கள் சமத்துவமாக நடத்தினால் உங்களை எரித்தே கொன்றுவிடுவாள்.

 

நீங்கள் அவளை ஸ்பெசலாக நடத்தவேண்டும். தலையில் தூக்கி வைத்து கொன்டாடவேண்டும்.

 

அதன்பின் பெண்மையின் நெகடிவ் சக்திகள் அனைத்தையும் உங்கள் மேல் பயன்படுத்துவாள்..

 

காரணம், நீங்கள் அவளது சூப்பர் ஹீரோ…உங்கள் ஹீரோ எந்த நடிகராகவோ, தலைவனாகவோ இருக்காலம். ஆனால் நீங்கள் தான் அவளின் சூப்பர் ஹீரோ, காக்கும் சிவன்.

 

ஆனால் உங்கள் பலத்தை அறியாது பலவீனங்களில் வீழ்ந்து கிடக்கிறீர்கள்.

 

அது அவளுக்கு சுத்தமாக பிடிக்காது…

 

உங்கள் பலத்தை நீங்கள் அறியமாட்டீர்கள். காதலிக்கும் பெண்ணே அறிவாள், அவளுக்கு முன் உங்கள் தந்தை அறிவார். பாசத்தால் கட்டுண்ட உங்கள் தாய் கூட அறியமாட்டார்.

 

உங்கள் பலவீனங்கள், வீக் பாயின்டுகள் அனைத்தும் பெண்மையின் எதிர்மறை சக்தியில் சுட்டு எரிக்கப்படும். உங்கள் பலவீனம் ஒவ்வொன்றுக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

 

பலவீனங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு மாபெரும் வெற்றிகளை அடைந்தால் உங்கள் வெற்றிஊர்வலம் நடக்கும் திருவிழாவின் முதல் ரசிகையாக அவளே இருப்பாள்.

 

அப்படி நடக்கவில்லை எனில் ஆயுள் முழுக்க குடும்பம் போர்க்களமாகும்

 

உண்மையான காதல் இப்படி உங்களை உயர்த்துகிறது….அதை நீங்கள் சரியான முறையில் புரிந்துகொன்டால்!

– Neander Selvan.

Previous article2024 ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும்
Next articleபஸ் விடமாட்டிங்களாயா? கதறும் அடித்தட்டு மக்கள்! கண்டுகொள்ளாத அரசு!