கஷ்டங்கள் கர்ம வினைகள் தீர.. கார்த்திகை மாதத்தில் இந்த தானம் தவறாமல் செய்யுங்கள்!!

Photo of author

By Gayathri

புனித மாதமான கார்த்திகையில் தீபம் போடுவதை நம் மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.தீப நாளில் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் வீட்டிலும் சிவன் கோயிலிலும் தீபம் போட வேண்டும்.

அதோடு ஒவ்வொரு கார்த்திகை திங்களிலும் சோமவார விரதம் கடைபிடிக்க வேண்டும்.சோமவார விரதம் சிவனுக்கு இருக்க வேண்டிய விரதங்களில் ஒன்றாகும்.கார்த்திகை மாதம் முழுவதும் சிவனுக்கு சங்கு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

சிவன் அருள் பெற சோமவார விரதம் இருப்பதோடு சிவன் கோயிலுக்கு சென்று சில தானங்களை வழங்கலாம்.உங்கள் வீட்டருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வழிபாட்டிற்கு வேண்டிய பொருட்களை தானமாக கொடுக்கலாம்.என்ன பொருட்கள் வாங்கி தர வேண்டும் என்பது தெரியாதவர்கள் கோயில் குருக்களின் கேட்டறிந்த பிறகு வாங்கி கொடுக்கலாம்.

சிவனுக்கு உகந்த வலம்புரி மற்றும் இடம்புரி சங்கை வாங்கி கொடுக்கலாம்.இந்த வலம்புரி மற்றும் இடம்புரி சங்கை வாங்கி கொடுத்தீர்கள் என்றால் சிவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.கோயிலில் கொடுக்கும் சங்கை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.

அதேபோல் வில்வ இலைகளில் மாலை கோர்த்து சிவ வழிபாட்டிற்கு கொடுக்கலாம்.அதிக வாசனை நிறைந்த மரிக்கொழுந்தை வாங்கி கொடுக்கலாம்.கார்த்திகை மாதம் முடிவதற்குள் இதை மறக்காமல் செய்யுங்கள்.நிச்சயம் உங்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் அனைத்தையும் சிவன் போக்குவார்.