உங்கள் ஆண்டிராய்டு மொபைலில் ஸ்பீடு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்!!

Photo of author

By Divya

உலக மக்கள் பலர் ஆண்ட்ராய்டு மொபலை விரும்பி பயன்படுத்துகின்றனர்.குறைந்த விலையில் பல பிராண்டுகளில் ஆண்டிராய்டு மொபைல் போன் கிடைப்பதால் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

புதிதாக வாங்கிய மொபைல் போன் சில மாதங்கள் மட்டுமே வேகமாக செயல்படுகிறது.அதன் பிறகு மொபைலின் வேகம் குறைந்துவிடுகிறது.மொபைலில் அதிக ஆப்ஸ் பதிவிறக்கம் செய்வது,கோப்புகளை பதிவிறக்கம் செய்வது போன்ற காரணங்களால் அதன் செயல்பாடு குறைகிறது.

உங்கள் மொபைல் போனில் வேகம் குறைந்தலோ அல்லது ஹேங்க் ஆனாலோ அதை மறுதொடக்கம் செய்து பிறகு பயன்படுத்தலாம்.மொபைல் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது திடீரென்று அதன் செயல்திறன் குறைந்தால் சாதனத்தை உடனே மறுதொடக்கம் செய்ய வேண்டும்.

உங்கள் மொபைலில் கோப்புகளை சேமிக்க இடம் இல்லை என்றால் அதை ரேம் செய்யலாம்.மொபைலில் ஸ்டோரேஜை அதிகம் பிடிக்கும் கோப்புகள் மற்றும் ஆப்ஸ் இருக்கிறதா என்பதை கவனிக்கவும்.அதன் தேவையில்லை என்றால் நீக்கிவிடுவது நல்லது.இவ்வாறு செய்வதால் மொபைலின் செயல்திறன் அதிகரிக்கும்.

உங்கள் மொபைலின் செயல்திறன் குறைய ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இல்லாமை,மெமரி இல்லாமை போன்றவையும் காரணமாக இருக்கிறது.எனவே பயன்பாட்டில் இல்லாத செயலி,கோப்புகளை பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் தரவுகளை நீக்கினால் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் மற்றும் போதிய மெமரி அதிகரிக்கும்.

நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் செயல்களை மட்டும் ஹோம் ஸ்க்ரீனில் வைக்கவும்.உங்கள் ஆண்டிராய்டு போனின் செட்டிங்க்ஸை அப்டேட் செய்வதன் மூலம் மொபைலில் செயல்திறனை அதிகரிக்கலாம்.