உங்களில் பலரது வீடுகளில் பல்லி,கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகமாக இருக்கும்.இதன் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பாலோ பண்ணுங்க.
தேவையான பொருட்கள்:-
1)ஸ்ப்ரே பாட்டில் – ஒன்று
2)கற்பூரம் – இரண்டு
3)டாலகம் பவுடர் – ஒரு தேக்கரண்டி
4)வெது வெதுப்பான தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி டால்கம் பவுடர் போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் இரண்டு கற்பூரத்தை இடித்து தூளாக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு வெது வெதுப்பான தண்ணீர் ஒரு கிளாஸ் அளவிற்கு ஊற்றி கலக்குங்கள்.இதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி நன்கு கலக்குங்கள்.
பிறகு காரப்பன் பூச்சி,பல்லி நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் இதை ஸ்ப்ரே செய்யுங்கள்.இப்படி செய்தால் அதன் நடமாட்டம் முழுமையாக ஒழியும்.
தேவையான பொருட்கள்:-
1)மிளகு – ஒரு தேக்கரண்டி
2)புதினா இலைகள் – 10
3)விளக்கெண்ணெய் – 50 மில்லி
4)வெது வெதுப்பான தண்ணீர் – ஒரு கப்
5)ஸ்ப்ரே பாட்டில் – ஒன்று
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் வாணலி வைத்து 50 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் 10 புதினா இலைகள் மற்றும் ஒரு தேக்கரண்டி மிளகு போட்டு சூடாக்க வேண்டும்.
இந்த எண்ணெய் நன்கு கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து பாடலிலுக்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த எண்ணை ஒரு தேக்கரண்டி அளவு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.இதனை வீட்டில் பல்லி,கரப்பான் பூச்சி இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் நடமாட்டத்தை ஒழித்துவிடலாம்.
தேவையான பொருட்கள்:-
1)இரண்டு முட்டை ஓடு
2)நான்கு கிராம்பு
செய்முறை விளக்கம்:-
முதலில் இரண்டு முட்டை ஓட்டை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதம் வரும் வரை அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு நான்கு கிராம்பை பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இவை இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்து கரப்பான் பூச்சி,பல்லி நடமாடும் இடத்தில் தூவினால் அவற்றின் தொல்லைகள் ஒழியும்.