தினமும் இந்த பழக்கத்தை செய்து பாருங்கள்! இவை இரண்டையும் நெற்றியில் இட்டு வந்தால் மாற்றம் நிகழும்!
ஆன்மீக சிந்தனை அதிகம் உடையவர்கள் மற்றும் முகம் பொலிவு பெறுவதற்காக நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் போன்றவற்றை விரும்பி பக்தியுடன் அணிந்து கொள்வார்கள். மேலும் இதனால் இறை சிந்தனையும், ஆரோக்கியமும், மன தெளிவும் உண்டாகும் என்பது முன்னோர்களின் கருத்து. மேலும் அந்த வகையில் இந்த ஒரு பொருளை நெற்றியில் இட்டுக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
முதலில் இரு புருவங்களுக்கு மத்தியில் பெண்கள் பொட்டு இட்டுக் கொள்வதன் மூலம் அவர்களுடைய ஆரா சக்தி அதிகரிக்கும். அதனால் மனக்கட்டுப்பாடு, தைரியம் பெருகும் என்றும் கூறப்படுகிறது. அது போல திருமணமான பெண்கள் நெற்றியின் வகிட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதற்கு பின்னாடியும் நிறையவே அறிவியல் தத்துவங்கள் இருக்கின்றது.
காலில் மெட்டி அணிவது, மோதிர விரலில் மோதிரம் அணிவது போன்றவற்றிலும் கூட நரம்புகள் தூண்டப்பட்டு பல்வேறு பலன்கள் கிடைக்கப் பெறுகின்றனர். நம் முன்னோர்கள் செய்து வந்த ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும், ஒவ்வொரு விதமான அறிவியல் காரணங்களும் மறைமுகமாக ஒளிந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் அது போல தினமும் நெற்றியில் சந்தனம் வைத்துக் கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக கண்டறிந்துள்ளனர். சந்தனம் குளிர்ச்சியான ஒரு பொருள் ஆகும். இதை தினமும் நெற்றிக்கு இரு புருவ மத்தியில் வைத்துக் கொள்வதன் மூலம் சிந்தனை தெளிவாகும் சக்தி பெருகும் என்றும் கூறப்படுகிறது. நம் உடம்பில் இருக்கும் வர்ம புள்ளிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான தூண்டுதல்கள் இருக்கின்றன.
ஹிப்னாட்டிசம் செய்யும் பொழுது நெற்றியின் இரு புருவங்களுக்கு மத்தியில் சுண்டுவிரலை வைத்து நீட்டி நேராக பிடிப்பார்கள். இப்படி நமக்கு பிடிக்கும் பொழுதே மனதில் ஒரு வகையான உணர்வு மலர ஆரம்பிக்கும். இந்த உணர்வு தியான நிலைக்கு கொண்டு செல்லும். இதனால் மனம் ஒருமுகப்படும்.
எத்தனை சிந்தனைகள் உங்கள் மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தாலும், இவ்வாறு செய்யும் பொழுது அவை எல்லாம் சட்டென நின்று மனம் ஒருமுகப்படும். இதனால் சிந்தனை தெளிவாகும், எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலை பெற முடியும்.
சந்தனம், மூளையின் பின்பகுதியில் இருக்கும் ஞாபகங்களை தூண்டி விடக் கூடியது. இதனால் ஞாபக சக்தி பெருகும். அடிக்கடி மறந்து போகும் இளம் வயதினர் மற்றும் மாணவர்களுக்கு இது போல தினமும் நெற்றியில் சந்தனம் வைத்து அனுப்பி பாருங்கள், ஞாபக சக்தி மெல்ல மெல்ல அதிகரிக்க துவங்கும். இதே போல குங்குமத்தை வைப்பதாலும் நிறையவே நன்மைகள் உண்டு.
குங்குமம் படிகாரம், சுண்ணாம்பு, மஞ்சள் கொண்டு தயாரிக்கப்படும் கிருமி நாசினியாக இருக்கிறது. நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்பவர்களுக்கு ஹிப்னாடிசம் வேலை செய்யாது. ஹிப்னாட்டிசத்தை முறியடிக்க கூடிய சக்தி குங்குமத்திற்கு உண்டு. இதனால் காத்து, கருப்பு அண்டாது, துர்சக்திகள் நம்மை நெருங்காது என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்.
மன உளைச்சல், மன இறுக்கம் ஆகியவை நீங்க தினமும் காலையில் எழுந்ததும் குளித்து முடித்துவிட்டு மனதார இறைவனை பிரார்த்தித்து நெற்றியில் சந்தனம், குங்குமம் அல்லது விபூதி ஏதாவது ஒன்றை இட்டுக் கொள்ளும் பழக்கத்தை கொண்டு வந்து பாருங்கள், உங்களுக்குள் மாற்றம் நிகழும் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.