விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழக அரசின் மானியம் கிடைக்க உடனே இதை செய்யுங்கள்!!

Photo of author

By Rupa

தமிழகத்தின் வாழ்வாதாரத்தை பெரிதும் உயர்வாக கருதி தமிழக அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் பம்ப் செட்டுகளை வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கு என பலவகையான சலுகைகளை மானிய முறையில்  வழங்கி வருகிறது.

பம்ப் செட் அதிகமாக மின்சாரம், நேரம் மற்றும் சீக்கிரம் பழுது அடைவதால் தற்பொழுது மின்சார மோட்டாருக்கானக்கான மானிய உதவியை தமிழக அரசு வழங்கி வருகிறது.    மின்சார பயன்பாட்டை அதிகரித்தல், குறைந்த செலவில் அதிகமான நீர் இறைத்தல் போன்றவை இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே உள்ள பம்ப் செட்டை மாற்றி புதிய மின் மோட்டார் பம்ப் செட்டை வாங்கி கொள்ளலாம். புதிதாக கிணறு வெட்டுபவர்கள் 50% வரை மானியம் பெற்று, சொந்த மின்சார இணைப்பு உள்ளவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 1000 மோட்டர்கள்  வழங்குவதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை உண்டு.  இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவர்கள்  https://mis.aed.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணபிக்கலாம்.

இந்நிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர், தானியங்கி பம்ப் செட் மானியத்தில் வாங்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2024-25 ஆம் நிதி ஆண்டில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கும் திட்டத்தில், தர்மபுரி மாவட்டத்திற்கு  ரூ.13.09/- லட்சம் மதிப்பிலான 187 மின் மோட்டார்கள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்தின்  மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.7000  மற்ற விவசாயிகளுக்கு ரூ.4000 வழங்கப்படும்.