ஒரு பிடி அவலை உங்கள் பூஜை அறையில் வைத்து பாருங்கள்! வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியே செல்ல மாட்டாள்!

Photo of author

By Kowsalya

பொதுவாக வெள்ளிக்கிழமை என்றாலே அனைவரும் வீட்டை சுத்தம் செய்துவிட்டு பூஜையறையை சுத்தம் செய்துவிட்டு மகாலக்ஷ்மியை மனதார வேண்டிக்கொண்டு நல்ல காரியம் அனைத்தும் வெள்ளிக்கிழமைகளில் செய்வார்கள். அப்படி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியையும் விஷ்ணுவையும் பூஜை செய்து அவர்களது ஆசீர்வாதத்தை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். அனைவருக்கும் வரக்கூடிய பண கஷ்டத்தில் இருந்து நீங்க அவலை பூஜை அறையில் வைத்து எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

வெள்ளிக்கிழமைகளில் காலையில் எழுந்து நீராடி முடித்து விட்டு ஒரு கிண்ணத்தில் ஒரு பிடி அவலை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து நன்கு ஊற விட வேண்டும்.. அது அப்படியே ஊறட்டும் ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் ஊறினால் போதும்.

இந்த அவலை வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி பூஜை செய்யும்பொழுது பூஜை அறையில் வைத்து விட வேண்டும். பூஜையை முடித்து விட்டு இந்த அவலை இரும்பு அல்லது காக்கா குருவிகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

இந்த முறையில் வாயில்லா ஜீவன்களுக்கு தானம் செய்யும்போது, இந்த தானம் நமக்கு கோடி புண்ணியத்தை தரும். நம் கர்ம வினைகள் அனைத்தும் குறைவதாக சொல்லப்பட்டுள்ளது.

மாலைப் பூஜையின்போது கடவுளுக்கு முன்பு இந்த அவலை வைத்துவிட்டு, அதன் பின்பு இந்த அவலை, உங்கள் வீட்டு அருகில் இருக்கக்கூடிய மரத்தடியில் கொண்டுபோய் வைக்கலாம். மொட்டை மாடியில் மாலை நேரத்தில் பறவைகளுக்கு சாப்பிடுவதற்காக வைக்கலாம். நம்பிக்கையோடு செய்யுங்கள் பணக்கஷ்டம் உங்கள் பரம்பரைக்கு வராது.