இதை மட்டும் சீமான் செஞ்சா.. கட்டாயம் திமுக க்ளோஸ்!! பாஜக மாநில தலைவர் பரபர பேட்டி!!

Photo of author

By Rupa

இதை மட்டும் சீமான் செஞ்சா.. கட்டாயம் திமுக க்ளோஸ்!! பாஜக மாநில தலைவர் பரபர பேட்டி!!

Rupa

do-this-only-to-eliminate-dmk-bjp-state-presidents-request-to-seeman

BJP NTK: தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்ற பிறகு கூட்டணி கட்சி ரீதியாக எந்த கேள்வி கேட்டாலும் மலுப்பும் பதிலை தான் கூறி வருகிறார். ஏன் எடப்பாடி பழனிச்சாமி கூட கூட்டணி வைத்துக் கொள்ளலாம் ஆனால் கூட்டணி அரசு ஆட்சியும் கிடையவே கிடையாது என்று கூறினார். இது குறித்து நாகேந்திரனிடம் கேட்டபோது கூட மேலிடம் பார்த்துக் கொள்ளும் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை எனக் கூறியதோடு அண்ணாமலை புயல் மாதிரி நான் தென்றல் மாதிரி என நைசாக விலகிக் கொண்டார்.

இதன் மூலமே தெரிகிறது அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் எவ்வளவு அழுத்தம் கொடுத்திருக்கும் என்று, கூட்டணி கட்சி குறித்து ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது என்ற நிபந்தனையை விதித்துள்ளதையும் இதன் மூலம் பார்க்க முடிகிறது. இப்படி இருக்கையில் சிறு கட்சி வாக்குகளையும் என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வந்து விட வேண்டுமென்று பாஜக எண்ணுகிறது. அதன் வெளிப்பாடாக இன்று நயினார் நாகேந்திரன் நேரடியாகவே சீமானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதில், நாம் தமிழர் கட்சியையும் தான் நாங்கள் கூட்டணிக்கு வர சொல்லி அழைக்கிறோம். குறிப்பாக சீமான் திமுகவை வீழ்த்த வேண்டுமென்று நினைக்கிறார். அப்படி இருக்கும் அவரை பாஜக கூட்டணியில் இணைய வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இவர் அவ்வாறு அழைப்பு விடுத்ததற்கு சீமான் பக்கத்திலிருந்து தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படி அமைதியாக இருப்பதற்கு கூட்டணிக்கு ஒப்புக்கொள்ள போகிறார் என கூறுகின்றனர்.