இந்த ஒரு பரிகாரம் போதும்! அனைத்து நீதிமன்ற வழக்கில் இருந்து தீர்வு கிடைக்கும் ! பூர்வீக சொத்து கைக்கு வரும்!

Photo of author

By Kowsalya

சொத்து என்று சொன்னாலே நமக்கு முதலில் ஏற்படுவது பிரச்சனைகள் ஆகத்தான் இருக்கும். அண்ணன் தம்பி என ஆரம்பித்து, உறவினர்கள் வரையில் முறிவை ஏற்படுத்திக் கொள்ளும் பிரச்சனை தான் இந்த சொத்து பிரச்சனை. சின்ன இடமாக இருந்தாலும் சரி, பெரிய இடமாக இருந்தாலும் சரி தங்களுக்கென ஒரு சொத்து வேண்டும் என்று நினைப்பவர்கள் இல்லாமல் இல்லை. எப்படியாவது கோர்ட்டில் கேஸ் போட்டு அந்த சொத்தை கைப்பற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.ஆனால் அது வருடம் வருடமாக இழுத்துச் செல்லும். உயிரிழப்புகள் கூட இந்த சொத்துகளால் ஏற்பட்டுள்ளது. அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வர இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் உங்களது பிரச்சனை விரைவில் முடிவடையும்.

வருடக்கணக்கில் உங்கள் கேஸ் கோர்ட்டில் நிலுவையில் இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்யுங்கள் கண்டிப்பாக சொத்து உங்களுக்கு கையில் வரும். இந்த வழக்கில் உங்களது பக்கம் நியாயம் கண்டிப்பாக இருக்கிறது என்றால் மட்டுமே இந்த பரிகாரம் செல்லுபடியாகும்.

1. முதலில் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் பழமையான கோயிலுக்குச் செல்லுங்கள்.

2. அங்கு பின்னிக் கொண்டிருக்கும் நாக சிலை மற்றும் பிள்ளையார் மற்றும் பைரவர் மூன்று தெய்வங்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.

3. முதலில் நாக சிலைக்கு காய்ச்சாத பாலை எடுத்துக்கொண்டு போய் அபிஷேகம் செய்துவிட்டு, பின்னர் சுத்தமான தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்து, பூவைத்து, மஞ்சள், குங்குமம் இட்டு, கண்திறந்து நேருக்கு நேர் பார்த்து உங்களது குறைகளை உங்களது பிரச்சினைகளை நேரடியாக வேண்டிக் கொள்ள வேண்டும்.

4. பின் அருகில் இருக்கும் விநாயகர் சிலைக்கு சிறு தேங்காய் உடைக்கவேண்டும்.

5. பின் பைரவருக்கு நல்லெண்ணையில் தீபமேற்றி வழிபட வேண்டும்.

இந்த பரிகாரத்தை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். சூரிய உதயத்திற்கு பின்பு சூரியன் மறைவதற்கு முன்பு செய்யலாம். பன்னிரண்டு மணிக்கு செய்யக்கூடாது. இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமைகளில் 6 வாரம் தொடர்ந்து செய்து வந்தால் வருடக்கணக்கில் நிலுவையில் இருந்த வழக்குகள் கூட விரைவில் முடிவடையும்.

 

நம் முன்னோர்கள் வைத்திருந்த அரச மரத்தடியில் வீற்றிருக்கும் இந்த பின்னிப்பிணைந்த நாகர் சிலைக்கு எத்தனை மகத்துவங்கள் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. இந்த சிலையின் வடிவத்தை தான் மருத்துவர்கள் வைத்துள்ளார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். முன்னோர்கள் எதையும் காரணம் இன்றி செய்ய மாட்டார்கள் என்பதற்கு இந்த வடிவமே சான்று. இந்த நாகர் சிலையை வணங்கி வரும் பொழுது வாழ்க்கையில் எந்த நோய் நொடியும் இல்லாமல் வாழ்க்கை சுபிட்சமாக அமையும் என்பது ஐதீகம்.