மூல நோய் முற்றிலும் குணமாக இதை செய்யுங்கள்!! கட்டாயம் குணமாகும்!!

Photo of author

By Selvarani

மூல நோய் முற்றிலும் குணமாக இதை செய்யுங்கள்!! கட்டாயம் குணமாகும்!!

பைல்ஸ் பிரச்சனை இருந்தால், அதனை உடனே கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவை முற்றி நாள்பட்ட இரத்த கசிவு, திசுக்களின் இறப்பு மற்றும் ஆசன வாய் மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. பிரச்சனைக்கு ஒருசில இயற்கை வைத்தியத்தின் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

கருணைக்கிழங்கு சாப்பிடுவதால், கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணப்படுத்துகின்றன. பசியை தூண்டி, இரைப்பைக்கு பலம் சேர்க்கும். மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதை முற்றிலும் குணப்படுத்த விரும்பினால், கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர நிவாரணம் கிடைக்கும். உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது.

மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முக்கியமாக நார்சத்து தேவைப்படும். சர்க்கரைவள்ளி கிழங்கில் தேவையான அளவில் நார்சத்து நிறைந்துள்ளதால் குடலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளதால் வைட்டமின் ஏ சத்தை உடலுக்கு அதிகம் அளித்து கண் சம்பந்தமான நோய்கள் வராமலும் தடுக்கிறது. புகை பிடிக்கும் போது, குடல் வீங்கத் தொடங்கும். இதுபோன்ற, உள் உறுப்புகளின் வீக்கத்தைக் குறைக்கவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உதவும்.

சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே வளரும் இளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இக்கிழங்கை சாப்பிடுவதால் உடலில் சத்து தேவைகள் பூர்த்தியாகும்.