அழகன் முருகனுக்கு வேல் வழிபாட்டை இப்படி செய்தால் 21 நாட்களில் நினைத்த காரியம் சித்தி பெறும்!

0
97

அழகுக்கும் தமிழுக்கும் பெயர் போனவர் எம்பெருமான் முருகன். அவரை மனம் உருகி வேண்டுவோருக்கு நினைத்த காரியத்தை அள்ளித்தரும் தமிழ் கடவுள் அவர்.

முருகனுக்கு மிகுந்த கருணை உள்ளமாம். யார் எதை நினைத்து மனமுருகி வேண்டினால் அப்படியே சித்தி பெற செய்து விடுவாராம். அவரது பக்தர்களுக்கு எந்த விதத்திலும் உருவெடுத்தது உதவியை ஓடோடி செய்வதில் முருகனுக்கு மிஞ்சியவர் யாருமில்லை.

இப்படி நினைத்த காரியம் 21 நாட்களில் சித்திபெற வேல் வழிபாட்டை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இதை நீங்கள் 21 நாட்களும் தவறாமல் கடைபிடித்தால் என்ன நினைத்தீர்களோ அது அப்படியே நடக்கும்.

குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சனைகள் தீர, நீண்ட நாளாக இருந்து வரும் நோய் நொடிகள் தீர, குழந்தை பாக்கியம் கிடைக்க, திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்க, வீட்டில் செல்வ கடாட்சம் நிலைத்திருக்க, நல்ல வேலை கிடைக்க, சொந்த வீடு கட்ட, இப்படி எந்த வேண்டுதலை வைத்தும் இந்த வழிபாட்டினை நீங்கள் செய்யலாம்.

1. அதற்கு முதலில் ஒரு சிறிய வேலை வாங்க வேண்டும். அந்த வேலை நீங்களே போய் வாங்காமல் ஒருவருடைய கையிலிருந்து உங்களுக்கு வரும் பொழுது அது இன்னும் சிறப்பாகும். வீட்டில் இருக்கும் முதியவர்கள் அல்லது பெரியவர்களோ அல்லது உங்கள் குருக்களோ ஆசிரியரோ அவர்களிடமிருந்து உங்கள் கைக்கு வருவது மிகவும் நல்லது.

2. எனவே வேலானது தங்கம், வெள்ளி, பித்தளை என அவர்களின் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.

3. முதலில் ஒரு பித்தளையால் ஆன சொம்பு எடுத்துக் கொள்ளவும்.

4. அந்த சொம்பிற்க்கு மஞ்சள், குங்குமம் இட்டு திருநீற்றை நிரப்பி வைத்து வாங்கி வந்த வேலை சொருகி விட வேண்டும்.

5. வேலுக்கு மஞ்சள் குங்குமம் இடவேண்டும்.

6. வேலை சுற்றி பூக்களை வையுங்கள்.

7. அர்ச்சனை செய்ய உதிரிப் பூக்களை வாங்கிக்கொண்டு 108 முறை ” ஓம் முருகா” என சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

8. கடவுளுக்கு நெய்வேத்தியம் படைக்க வேண்டும். பொங்கல் அல்லது கற்கண்டு சாதம் படைக்கலாம்.

9. இப்படி 21 நாட்களும் தொடர்ந்து செய்ய வேண்டும் அதன்பிறகு 21 வது நாள் பூஜையை முடித்துவிட்டு அந்த வேலை முருகன் கோவில் உண்டியலில் சேர்த்து விடவேண்டும்.

10. 21 நாட்கள் தடையின்றி இந்த பூஜையை நீங்கள் செய்துவிட்டால் உங்களுடைய காரியம் தடையில்லாமல் நிச்சயம் நடக்கும்.

சொம்பில் இருக்கும் விபூதியை தினம்தோறும் நீங்கள் நெற்றியில் இட்டுக் கொள்ளலாம்.

author avatar
Kowsalya