கால் ஆணி உள்ள இடங்களில் இதை செய்யுங்கள்!! கட்டாயம் நிரந்தரமான தீர்வு கிடைக்கும்!!
கால் ஆணி என்பது ஆபத்தானது அல்ல. ஆனால் அது எரிச்சலை உண்டாக்கும். கூர்மையான பொருள்கள் கால் பாதங்களில் அழுத்தி இறங்கும் போது பாதத்திலிருந்து ரத்தம் வந்தாலும் அதன் பிறகு அந்த இடம் தடிமனாக இருக்கும். அந்த இடத்தில் எப்போதும் வலி இருந்து கொண்டே இருக்கும். இதை அகற்றிய பிறகும் அவ்வபோது தோல் வளர்ந்து மீண்டும் மீண்டும் கால் ஆணி பிரச்சனை இருக்கும்.
கால் ஆணியின் முதல் அறிகுறியாக பாதத்தின் தோல்பகுதி கடினமானதாக மாறும். பாதத்தில் சிறு கொப்புளங்கள் கூட இப்படி மாறக்கூடும். பாதிக்கப்பட்ட பகுதி கூம்பு வடிவமாகவோ அல்லது வட்டமாகவோ தோற்றமளிக்கும.அந்த இடத்தில் வெள்ளை, மஞ்சள் அல்லது சாம்பல் போன்ற நிறமாற்றங்கள் நடக்கும். பின் நடப்பதில் சிரமம் ஏற்படும்.
பொருட்கள்:
1. மருதாணி இலை பொடி
2. கிழங்கு மஞ்சள் பொடி
3. கற்பூரம்
செய்முறை:
முதலில் கற்பூரத்தை பொடியாக்கி எடுத்துக் கொண்டு, கிழங்கு மஞ்சள் சிறிதளவு, மருதாணி இலை பொடி சிறிதளவு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலக்கிக் கொள்ளவும். இதனை இரவு நேரங்களில் கால் ஆணி உள்ள இடங்களில் நன்கு தடவிக் கொள்ளவும். மேலும் குலியாக உள்ள பகுதிகளிலும் நன்றாக அழுத்தி பூசிக்கொண்டு, அதன் மீது பாலித்தீன் கவர் இருந்தால் அதனை சுற்றி அதன் மேல் காட்டன் துணி வைத்து இறுக்க கட்டிக் கொள்ளவும். இதனை காலையில் நீக்கிக் கொள்ளலாம். இதேபோன்று 48 நாட்கள் தொடர்ந்து செய்து வருகையில் கால் ஆணி திரும்ப வராமல் முற்றிலும் குணமாகும். இவ்வாறு செய்து கால் அன்னையிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சி பெறுங்கள்.