நம்முடைய பாதத்தில் உள்ள வெடிப்புகளை குணப்படுத்த வேண்டுமா? மருதாணி மற்றும் தயிர் இரண்டும் போதும்! 

Photo of author

By Rupa

நம்முடைய பாதத்தில் உள்ள வெடிப்புகளை குணப்படுத்த வேண்டுமா? மருதாணி மற்றும் தயிர் இரண்டும் போதும்!
பெண்களுக்கு சிலருடைய கால்களில் பார்த்தால் பாதத்தில் பிளவுகள் போல வெடிப்புகள் ஏற்பட்டு இருக்கும். இந்த வெடிப்புகள் பித்தம் அதிகமானால் ஏற்படும். பாதத்தில் உள்ள வெடிப்புகளை நாம் சாதாரணமாக விட்டு விடக்கூடாது. ஏனென்றால் பாதத்தில் உள்ள வெடிப்புகள் மூலமாக நோய்க் கிருமிகள் உடலுக்குள் செல்ல வாய்ப்புகள் உள்ளது. இது மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இந்த பாதத்தில் உள்ள வெடிப்புகள் பெண்களுக்கு வலி, எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இந்த பாத வெடிப்புகளை கவனிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இந்த பாத வெடிப்பகளை மருதாணி மற்றும் தயிரை வைத்து குணப்படுத்தலாம். அது எவ்வாறு என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* மருதாணி இலைகள்
* தயிர்
செய்முறை…
ஒரு மிக்சி ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் மருதாணி இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிதளவு தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை மை போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த கலவையை பாதத்தில் வெடிப்புகள் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பாதத்தில் உள்ள வெடிப்புகள் உடனே மறையத் தொடங்கும்.