உங்களுக்கு எப்பொழுதும் தலை பாரமாக இருக்கின்றதா? அப்போ உடனே இதை செஞ்சு பாருங்க!!
நாம் அனைவருக்கும் தலைவலி, ஒற்றைத் தலைவலி வருவது சாதாரணமான ஒன்று தான். அது போலவே நமக்கு ஒரு சில சமயங்களில் தலை பாரமாக இருக்கும். அதாவது தலைக்கு மேல் எதோ கனமான பொருளை வைத்தது போலவே இருக்கும்.
அவ்வாறு தலை பாரமாக இருக்கும் சமயங்களில் நாம் சோர்வாக இருப்போம். எப்பொழுதும் தலைவலியும் இருக்கும். அவ்வாறு நமக்கு சோதனை தரக்கூடிய தலை பாரத்தை இறக்கி வைக்க பல மருந்துகளை சாப்பிட்டு பலவித சிகிச்சைகளை செய்தாலும் தலை பாரம் குறையாது. அவ்வாறு குறையாமல் இருக்கும் தலை பாரத்தை முற்றிலுமாக குறைக்க இந்த பதிவில் அருமையான வைத்திய முறை ஒன்று பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய்
* தும்பைப் பூ
செய்முறை:
முதலில் அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பாத்திரத்தில் நல்லெண்ணயை ஊற்றி விடவும். பின்னர் இதில் எடுத்து வைத்துள்ள தும்பைப் பூக்களை சேர்க்க வேண்டும்.
இந்த எண்ணெயை நன்கு காய்ச்ச வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு அடுப்பை அனைத்துவிட்டு எண்ணெயை ஆற வைக்க வேண்டும். எண்ணெய் ஆறிய பின்னர் இதை தலையில் தேய்க்கலாம்.
தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதை தவிர்க்காமல் அடிக்கடி செய்து வந்தால் தலைபாரம் குறையும். தலை வலியும் சரியாகும்.