நீங்கள் பெட்ரோல் டேங்க்கை தினமும் பில் பண்ணுவீர்களா!! அப்போது இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By CineDesk

நீங்கள் பெட்ரோல் டேங்க்கை தினமும் பில் பண்ணுவீர்களா!! அப்போது இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

நாம் அனைவரும் எப்பொழுதுமே வண்டிக்கு பெட்ரோல் போடும்போது டேங்க்கை முழுவதுமாக நிரப்பி பெட்ரோல் போடுவோம். இவ்வாறு டேங்க்கை நிரப்பி பெட்ரோல் போடுவதால் சில வண்டிகள் வெடித்து விடும் என்று கூறுகிறார்கள்.

அதாவது வண்டிகளுக்கு டேங்க் நிரம்பும் படி பெட்ரோல் போடலாம் போடக்கூடாது என்று சொல்வதற்கு சில காரணங்கள் உள்ளது. பிஎஸ்3 மற்றும் சில பிஎஸ்4 வண்டிகளில் பெட்ரோல் டேங்கில் இரண்டு துளைகள் காணப்படும். அதுவே பிஎஸ்4 மற்றும் பிஎஸ் 6 வண்டிகளில் பெட்ரோல் டேங்கில் ஒரு துளைகள் இருக்கும்.

இந்த துளைகள் காற்று உள்ளே செல்வதற்கும் பெட்ரோலின் ஆவிகள் வெளியே செல்வதற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நாம் பெட்ரோல் டேங்க் நிரம்ப பெற்றோலை போடும்போது காற்று உள்ளே செல்லாமல் வண்டி அடைத்து அடைத்து ஓட்ட வேண்டிய நிலைமை ஏற்படும்.

இவ்வாறு பெட்ரோலை டேங்கில் நிரம்பும் படி போட்டுவிட்டு வண்டியை சைட் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும் போது பெட்ரோல் கீழே வழிந்து வர வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு பெட்ரோல் கீழே வலிந்து இருக்கும்போது வெயில் அதிகமாக காணப்பட்டால் வண்டியை ஆன் செய்த உடனேயே வெடிக்கும் வாய்ப்பும் நிறைய இருக்கிறது.

இவ்வாறு அனைத்து வண்டிகளுக்கும் நடக்கும் என்று சொல்ல முடியாது ஒரு சில வண்டிகளில் மட்டுமே இந்த கவனக்குறைவால் ஆபத்து நிகழும். இதேபோல் பெட்ரோல் டேங்க்கை நிரப்பி ஏதேனும் விபத்து நடந்து விட்டால் அந்த நேரத்திலும் வண்டி வெடிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதனால் டேங்க் நிரப்பிய உடனேயே வண்டி வெடிக்கும் என்று கூற முடியாது மேலே குறிப்பிடப்பட்டுள்ள தவறுகளை கவனக்குறைவாக செய்தால் மட்டுமே இந்த ஆபத்து நிகழும். எனவே பெட்ரோல் போடும் போது டேங்க் கெபாசிட்டி எவ்வளவு இருக்கிறதோ அதைவிட சிறிதளவு குறைவாக பெட்ரோல் போட வேண்டும்.

உதாரணத்திற்கு டேங்க் கெபாசிட்டி 13 லிட்டர் என இருக்கும் பட்சத்தில் நாம் 12 லிட்டர் நிரப்பி இருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. ஒவ்வொரு வண்டியிலுமே இந்த டேங்க் கெபாசிட்டி அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி பெட்ரோல் போட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது.

வண்டிகளில் பெட்ரோல் போட்ட பிறகு அதன் மூடியை சரியாக மூட வேண்டும் .இல்லையெனில் அது ஆவியாவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதுபோல பெட்ரோல் டேங்க்கை நிரப்புபவர்கள் பெரும்பாலும் காலை நேரத்திலேயே செய்கின்றனர்.

எனவே இனிமேலாவது இதை தெரிந்து கொண்டு டேங்க் கெபாசிட்டி இருக்கும் அளவைவிட சிறிதளவு குறைவாக பெட்ரோலை நிரப்புங்கள். இல்லையெனில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே இந்த வழிமுறைகளை பின்பற்றி நடக்குமாறு அனைவருக்கும் அறிவுறுத்தப்படுகிறது.