ரயிலில் தட்கல் டிக்கெட் புக் பண்ணனுமா? இப்படி பண்ணிங்கன்னா உடனே டிக்கெட் கிடைக்கும்!!
நாம் எங்காவது வெளியூர் செல்வதாக இருந்தால், முதலில் தேடுவது ரயில் டிக்கெட்டுகளைத்தான். இதில் செலவும் குறைவு, நேரமும் குறைவு மற்றும் பயண அலுப்பும் இருப்பதில்லை. ஊரில் பண்டிகை, விடுமுறை நாட்கள், திருமணம் போன்ற நாட்களில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே விரும்புகிறனர்.
ஆனால் திடீரென பயணம் மேற்கொள்பவர்கள், முன்பதிவு சமயத்தில் டிக்கெட் கிடைக்காதவர்கள் தட்கல் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள். தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அவ்வளவு எளிதில் தட்கல் டிக்கெட் கிடைப்பதில்லை.
ஆன்லைனில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணிகளின் விவரங்களை பதிவு செய்வதற்கு நேரம் எடுக்கும். இதனால் மற்றவர்கள் முன்பதிவு செய்வதற்கு வாய்புகள் அதிகம். உங்களின் விபரங்களை நீங்கள் வேகமாக நிரப்பினாலும், இணையதளங்களின் வேகம் குறைவு, பணம் செலுத்துவதில் சிக்கல் இப்படி பல வழிகளில் நேரம் விரயமாகும்.
இப்படி எந்த சிக்கலும் இல்லாமல், சுலபமாக ரயில் டிக்கெட்டை பெறுவதற்கு சில வழிமுறைகள் உள்ளது. இதை சரியாக செய்தால் உறுதியாக டிக்கெட் கிடைக்க வாய்ப்புள்ளது.தட்கல் டிக்கெட் என்பது ஒரு நாள் முன்பாக மட்டுமே பதிவு செய்ய முடியும். உதாரணமாக நீங்கள் 5ஆம் தேதி ஊருக்கு செல்வதாக இருந்தால் 4 ஆம் தேதிதான் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
இதற்க்கு எப்படி முன்பதிவு செய்வது என்றால், ரயில்வே இணையதளத்தில் ஏசி பெட்டிகளுக்கு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கு காலை 11 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது. இந்த இணையதளம் ஒரு மணி நேரத்திற்கு செயல்படும். இந்த நேரக்குறிப்பை வைத்து நாம் சுலபமாக தட்கல் டிக்கெட்டை உறுதி செய்து கொள்ளலாம்.