போலீஸ் உங்களை துரத்துவது.. கைது செய்வது போன்று கனவு வருகிறதா? அப்போ இதெல்லாம் நடக்கக் கூடும்!

Photo of author

By Divya

போலீஸ் உங்களை துரத்துவது.. கைது செய்வது போன்று கனவு வருகிறதா? அப்போ இதெல்லாம் நடக்கக் கூடும்!

நாம் தூக்கத்தில் இருக்கின்ற பொழுது பல விதமான கனவுகள் தோன்றுகின்றன.எல்லோருக்கும் ஒரே விதமான கனவுகள் வருவதில்லை.தூக்க நேரத்தில் நமது மனதில் ஆழமாக பதிந்த நிகழ்வுகள் கற்பனை காட்சிகளாக கனவில் தோன்றுகிறது.சில கனவுகள் சந்தோஷத்தையும்,சில கனவுகள் பயத்தையும் ஏற்படுத்துபவையாக இருக்கின்றது.

இறந்த முன்னோர்கள் ஆசிர்வதிப்பது,அல்லது நீங்களே இறந்து போவது போன்ற கனவுகள் வந்தால் அது நிச்சயம் நல்ல கனவு பட்டியலில் சேரும்.அதுவே இறந்தவர்கள் அழைப்பது,அழுவது போன்ற கனவுகள் நமக்கான எச்சரிக்கை என்று அர்த்தம்.சிலருக்கு போஸில் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும்.இதனால் அவர்களுக்கு அடிக்கடி போஸில் உடை அணிந்து இருப்பது போன்ற கனவுகள் வரும்.ஆனால் போலிஸ் கைது செய்வது,அடிப்பது போன்ற செயல்கள் கனவில் தோன்றினால் அது உங்களுக்கான எச்சரிக்கையாகும்.

போலிஸ் உங்களை துரத்துவது போன்று கனவு ஏற்பட்டால் நீங்கள் ஏதோ ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களுடைய கனவில் காவல் நிலையம், கோர்ட், இவைகள் வந்தால், நீங்கள் செய்யப்போகும் வேலையை மிகவும் கவனமாக செய்ய வேண்டும். இல்லையெனில் நீங்கள் செய்ய இருக்கும் காரியத்தில் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தம்.இதுபோன்ற கனவு வந்தால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உங்களை போலீஸ் காப்பாற்றுவது போன்று கனவு வந்தால் உங்களுக்கு விருப்பம் அற்ற செயல்களில் ஈடுபடுத்தப்படுவீர்கள் என்று அர்த்தம்.போலீஸ் உங்களை கைது செய்வது போன்ற கனவு வந்தால் உங்களது வாழ்க்கையில் ஆபத்தான நேரம் வரப் போகிறது என்று அர்த்தம்.இதுபோன்ற கனவுகள் வந்தால் தங்களின் தனிப்பட்ட விஷயங்களை பிறரிடம் பகிராமல் இருப்பது நல்லது.

அதேபோல் உங்கள் கனவில் ஒரு காவல் அதிகாரி தோன்றினால் நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து உங்களுக்கு அழுத்தம் அதிகரிக்கப் போகிறது என்று அர்த்தம்.