உங்களுக்கு தொப்பை இருக்கிறதா? அதை குறைக்க இதோ சிம்பிள் டிப்ஸ்!
நம்மில் பலரும் உடலுக்குத் தேவையான உணவுகளை உட்கொள்ளாமல் நாவின் சுவைக்கு தகுந்தது போல உணவுகளை உட்கொள்கின்றோம். இதனால் கெட்டக் கொழுப்புகள் உடலில் அதிகரித்து அது தொப்பையாக மாறி விடுகின்றது.
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளை சாப்பிடாமல் கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உட்கொண்டு உடல் எடையை அதிகரித்து தொப்பையையும் உருவாக காரணமாக இருக்கிறோம். தொப்பை உருவான பின்னரும் உடல் எடை அதிகரித்த பின்னரும் அதை குறைக்க மீண்டும் உடற்பயிற்சி என்று செய்யத் தெடங்குகிறோம்.
உடலை வருத்தி தொப்பையை குறைக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். ஆனால் பலன் என்பது இருக்குமா என்றால் இருக்காது. எனவே தொப்பையை குறைக்க இந்த பதிவில் உங்களுக்கு சில எளிமையான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
தொப்பையை குறைக்க உதவும் வழிமுறைகள்:
* தினமும் வெதுவெதுப்பான தண்ணீரில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடும்.
* தினமும் உங்களுடைய நாளை தியானத்துடன் தொடங்குங்கள். இது உங்களுக்கு புத்துணர்ச்சியை அழிக்கும்.
* தினசரி உணவில் பாசிப்பயிறு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சாப்பிட வேண்டும்.
* ராகி, தினை போன்ற தானியங்களையும் உங்கள் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பெருஞ்சீரகம் மற்றும் செலரி பயன்படுத்தி தேநீர் செய்து கொள்ளவும். இந்த தேநீரை இரவு உணவு சாப்பிடுவதற்கு முன்னர் குடிக்க வேண்டும்.
* உடற்பயிற்சி செய்வதை பழக்கமாகவும் வழக்கமாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
* தினமும் 7000 ஸ்டெப்ஸ் நடப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். முடிந்தால் 7000 ஸ்டெப்ஸ் நடப்பது மிகவும் நல்லது.
* இதனுடன் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளுக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.