தலையில் பேன் ஈறு கூட்டம் கூட்டமா அப்பிக்கிட்டு இருக்கா? இதை ஒழித்துக்கட்ட உடனே இந்த எண்ணெயை தேய்த்து தலைக்கு குளிங்க!!

Photo of author

By Divya

தலையில் பேன் ஈறு கூட்டம் கூட்டமா அப்பிக்கிட்டு இருக்கா? இதை ஒழித்துக்கட்ட உடனே இந்த எண்ணெயை தேய்த்து தலைக்கு குளிங்க!!

Divya

உங்களில் பெரும்பாலானோர் பள்ளி பருவ காலத்தில் நாம் அனைவரும் பேன்,ஈறு தொல்லையை அனுபவித்திருப்பீர்கள்.இது ஒருவர் தலையில் இருந்து மற்றொருவர் தலைக்கு எளிதில் பரவிவிடுகிறது.

தலையில் பேன்,ஈறு வந்துவிட்டால் அரிப்பு,தலையில் துர்நாற்றம் வீசுதல்,உடல் சோர்வு போன்ற பல பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும்.இங்கு சொல்லப்பட்டுள்ள கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வந்தால் பேன்,ஈறு தொல்லைக்கு தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)நல்லெண்ணெய்
3)வேப்பிலை
4)வெள்ளைப்பூண்டு பற்கள்
5)கருப்பு மிளகு
6)வெந்தயம்
7)சின்ன வெங்காயம்
8)வேப்பம் பூ

செய்முறை விளக்கம்:-

முதலில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் இரும்பு வாணலி ஒன்றை வைத்து சூடுபடுத்த வேண்டும்.

அதன் பின்னர் 100 மில்லி செக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு 100 மில்லி செக்கு நல்லெண்ணெய் ஊற்றி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும்.

அடுத்து நான்கு கொத்து வேப்பிலை,கால் கப் வேப்பம் பூவை சூடாகி கொண்டிருக்கும் எண்ணையில் சேர்க்க வேண்டும்.

பின்னர் இரண்டு வெள்ளைப் பூண்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பிறகு இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு தட்டி சூடாகி கொண்டிருக்கும் எண்ணையில் சேர்க்க வேண்டும்.பின்னர் கால் தேக்கரண்டி மிளகு மற்றும் கால் தேக்கரண்டி வெந்தயத்தை எண்ணையில் போட்டு இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு குறைவான தீயில் காய்ச்ச வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு இந்த எண்ணெயை நன்றாக ஆறவைக்க வேண்டும்.பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலுக்கு இந்த எண்ணெயை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த எண்ணையை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி அப்ளை செய்து இரண்டு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.பின்னர் ஷாம்பு அல்லது சீகைக்காய் பயன்படுத்தி வெது வெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும்.இதை வாரம் இருமுறை அல்லது மூன்றுமுறை செய்து வந்தால் தலையில் பேன்,ஈறு தொல்லை நீங்கிவிடும்.

மேலும் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி பாதியை தலைக்கு தேய்த்தால் பேன் ஈறு ஒழியும்.வேப்பிலையை மட்டும் பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து தலையில் தடவி குளித்து வந்தால் பேன்,ஈறு ஒழியும்.