ஜலதோஷம் அதிகமாக இருக்கின்றதா? இதை குணப்படுத்த இதை மட்டும் சாப்பிடுங்க! 

Photo of author

By Sakthi

ஜலதோஷம் அதிகமாக இருக்கின்றதா? இதை குணப்படுத்த இதை மட்டும் சாப்பிடுங்க!
ஜலதோஷம் என்பது அனைவருக்கும் ஏற்படுகின்றது. இந்த ஜலதோஷம் என்பது மூக்கில் ஏற்படும் வைரஸ் தொற்று ஆகும். இதனால் தொண்டையில் புண், மூக்கு ஒழுகுதல், தும்மல், இருமல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
இந்த ஜலதோஷம் பெரும்பாலும் மழை காலங்களில் ஏற்படுகின்றது. பெரும்பாலும் ஜலதோஷம் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றது. இந்த ஜலதோஷத்தை குணப்படுத்தும் எளிமையான வழிமுறை குறித்து தற்பொழுது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்…
* திப்பிலி
* கடுகு
* சீரகம்
* சுக்கு
* மிளகு
* வேப்பங்கொழுந்து
செய்முறை…
முதலில் எடுத்து வைத்துள்ள திப்பிலி, கடுகு, சீரகம், சுக்கு, மிளகு, வேப்பங்கொழுந்து ஆகியவற்றை ஒன்றாக ஒரு மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதை நிழலில் காய வைக்க வேண்டும். இது காய்ந்த பின்னர் இதை சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் ஜலதோஷம் உடனே குணமாகும்.