கையில் டிகிரி இருக்கா? அப்போ இந்தியன் வங்கி வேலைக்கு அப்ளை பண்ண தயாராகுங்கள்!!

நமது நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு கொண்டிருக்கும் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள ஆலோசகர் பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் அதற்கான தகுதி மற்றும் விண்ணப்பிப்பது குறித்த முழு விவரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

வேலை வகை: வங்கி வேலை

நிறுவனம்: இந்தியன் வங்கி(INDIAN BAN)

பதவி:

**ஆலோசகர்

காலிப்பணியிடங்கள்:

ஆலோசகர் பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

ஆலோசகர் பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

ஆலோசகர் பணிக்கு விண்ணப்பம் செய்ய அதிகபட்ச வயது வரம்பு 65 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மாத ஊதியம்:

ஆலோசகர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் அடைப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தபட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை:

www.indianbank.in என்ற இணையதளம் வாயிலாக ஆலோசகர் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

தலைமை பொது மேலாளர்(CDO & CLO),இந்தியன் வங்கி,கார்ப்பரேட் அலுவலகம்,HRM துறை,ஆட்சேர்ப்பு பிரிவு 254-260,அவ்வை சண்முகம் சாலை,ராயப்பேட்டை,சென்னை 600 014.

விண்ணப்பக்கட்டணம்:

பொது பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.1000/-

இதர வகுப்பினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.100/-

விண்ணப்பிக்க இறுதி நாள்:

மே 31 ஆலோசகர் பணிக்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாளாகும்.விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.