தலையில் பொடுகு பாதிப்பு ஏற்பட்டால் முடி உதிர்வு பிரச்சனை அதிகரிக்கும்.மழை,வெயில்,குளிர் என்று எல்லா பருவ காலங்களிலும் பொடுகு பிரச்சனையை நாம் சந்திக்கின்றோம்.குறிப்பாக குளிர் காலத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பொடுகு பாதிப்பு ஏற்படுகிறது.இயற்கை வழிமுறைகள் மூலம் இந்த பொடுகு தொல்லையை கட்டுப்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
1)தயிர் – நான்கு தேக்கரண்டி
2)வெந்தய விதை – இரண்டு தேக்கரண்டி
3)பேக்கிங் சோடா – கால் தேக்கரண்டி
4)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
முதலில் பசும் பாலில் தயிர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு வெந்தயத்தை வாணலியில் போட்டு வறுத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த வெந்தய பவுடரை தயிரில் போட்டு நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.அதன் பின்னர் கற்றாழை மடலில் இருந்து பிரஸ்ஸான ஜெல் எடுத்து தயிரில் போட்டு நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
அதன் பின்னர் கால் தேக்கரண்டி அளவு பேக்கிங் சோடா அதாவது சமையல் சோடாவை தயிரில் போட்டு நன்கு மிக்ஸ் செய்து தலை ஸ்கால்ப்பில் படும்படி தடவிக் கொள்ளுங்கள்.
ஒரு மணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை நன்கு அலசிக் கொள்ளுங்கள்.இந்த முறையை தொடர்ந்து முயற்சி செய்து வந்தால் தலையில் பொடுகு வராமல் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
1)தயிர் – நான்கு தேக்கரண்டி
2)வேப்பிலை சாறு – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
முதலில் இரண்டு கொத்து வேப்பிலையை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் நான்கு தேக்கரண்டி தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.அதன் பின்னர் அரைத்த வேப்பிலை சாறை அதில் ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இந்த ஹேர் பேக்கை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி அப்ளை செய்து சிறிது நேரம் ஊறவிடுங்கள்.பிறகு குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.இதை தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு பாதிப்பு முழுமையாக நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:
1)கடலை மாவு – இரண்டு தேக்கரண்டி
2)நெல்லிக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
3)வெந்தயப் பொடி – ஒரு தேக்கரண்டி
4)தயிர் – மூன்று தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
கிண்ணம் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து நெல்லிக்காய் பொடி மற்றும் வெந்தயப் பொடியை அதில் போட்டு நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் நான்கு தேக்கரண்டி தயிர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.இதை தலை முழுவதும் அப்ளை செய்து ஊறவைத்து குளித்தால் பொடுகு நீங்கும்.