உங்கள் வீட்டில் அதிக அளவு கொசுத்தொல்லை இருக்கின்றதா! இந்த விளக்கை மட்டும் ஏற்றுங்கள்!

Photo of author

By Parthipan K

உங்கள் வீட்டில் அதிக அளவு கொசுத்தொல்லை இருக்கின்றதா! இந்த விளக்கை மட்டும் ஏற்றுங்கள்!

தற்போது அதிகளவு மழை பெய்து வருவதால் கொசுத்தலை நம் வீட்டில் அதிகம் ஏற்படும். அதனை இயற்கையாக எவ்வாறு விரட்டுவது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இதற்கு நம் வீட்டில் உள்ள ஒரு சில பொருட்கள் மட்டுமே போதுமானது.

அதற்கு முதலில் கட்டி சாமராண்டி எடுத்து நன்கு உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் வேப்பெண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு டீஸ்பூன் வேப்ப எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும் அதனுடன் சாமராண்டி பொடியை நன்கு சலித்து ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதனை அடுத்து ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அதனை தோலுரித்து நடுப்பகுதியில் நன்கு குத்தி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு நாம் எடுத்து வைத்துள்ள எண்ணெய் மற்றும் சாம்பிராணி தூளை சிறிதளவு சூடு படுத்திக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஊசியில் சிறிதளவு நூல் சேர்த்து அதனை வெங்காயத்தின் நடுப்பகுதியில் கோர்த்துக் கொள்ள வேண்டும். சூடு படுத்தி வைத்துள்ள எண்ணெயை நாம் முன்னதாகவே குத்தி வைத்துள்ள அந்த ஓட்டையின் மூலம் வெங்காயத்தில் இறங்குமாறு செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த வெங்காயத்தை கொசு அதிகம் வரும் பகுதியில் கட்டி வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது கொசுக்கள் வருவதை நாம் தடுக்கலாம்.

இரண்டாவதாக வேப்ப எண்ணையில் பூண்டு சாறை சேர்க்க வேண்டும். அதனை அடுத்து ஒரு பெரிய வெங்காயம் எடுத்து அதனை நடுப்பகுதியை மட்டும் எடுத்து அதில் ஏற்பட்டுள்ள இடத்தில் இந்த எண்ணெயை ஊற்றி விளக்கு போட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கொசு வீட்டின் பக்கமே வராது.