வீட்டில் எலி கரப்பான் பூச்சி தொல்லை இருக்கா? இதை நிரந்தரமாக ஒழிக்க இப்படி செய்யுங்கள்!!

Photo of author

By Gayathri

நம் அனைவரும் வீடுகளில் நடமாடும் கரப்பான் பூச்சி,எலி,ஈ,எறும்பு,கொசு போன்றவற்றால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை சேதப்படுத்துதல்,கிருமிகளை பரப்புதல் போன்றவற்றை இந்த எலி,கரப்பான் பூச்சி போன்றவை செய்வதால் நமக்கு பெரும் தொல்லையாக அவை மாறிவருகிறது.

இந்த கரப்பான் பூச்சி,எலிகளை விரட்ட கடைகளில் விற்கப்படும் மருந்துகளை வாங்கி பயன்படுத்தினாலும் அவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடிவதில்லை.சிலர் வீரியம் மிகுந்த பூச்சிக் கொல்லிகளை வாங்கி சர்வ சாதாரண பயன்படுத்துகின்றனர்.

எந்த ஒரு சுகாதார வழிமுறைகளையும் பின்பற்றாமல் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் அது தங்கள் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.சமீபத்தில் சென்னை குன்றத்தூரில் எலிகளை கொல்ல வீட்டில் வைக்கப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்தால் மூச்சுத்திணறி இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீடுகளில் உள்ள பூச்சிகளை கொல்ல மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன்னர் நாம் சில விஷயங்களை அவசியம் பின்பற்ற வேண்டும்.முதலில் வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை பூச்சிகள் வராத இடத்தில் வைக்க வேண்டும்.

பிறகு குழந்தைகள் கண்ணில் படாத இடத்தில் பூச்சி மருந்துகளை சிறிதளவு வைக்க வேண்டும்.வீரியம் நிறைந்த மருந்துகளை அதிகளவு பயன்படுத்தி ஒரே நாளில் பூச்சிகளை ஒழிக்க விரட்டி விடலாம் என்று எண்ணி பலரும் யோசிக்காமல் ஆபத்து நிறைந்த பூச்சு மருந்துகளை அதிகளவு பயன்படுத்துகின்றனர்.இதனால் நமக்கு தான் ஆபத்து நேரிடும்.

எனவே பாதுகாப்பான முறையில் பூச்சி மருந்துகளை கையாள வேண்டும்.மருந்துகள் வைத்த பிறகு கைகளை சோப் பயன்படுத்தி நன்கு கழுவ வேண்டும்.பூச்சிகள் இறந்த பிறகு அதனை அப்புறப்படுத்திவிட்டு வீட்டை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.பூச்சு மருத்துங்களை பயன்படுத்த விரும்பாதவர்கள் ஜன்னல் போன்ற பூச்சி நுழையும் இடங்களில் வலைகளை பயன்படுத்தலாம்.இதனால் பூச்சிகள் தொல்லை கட்டுப்படும்.