சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறீர்களா இதோ உங்களுக்கான முக்கிய தகவல்! வங்கி வெளியிட்ட சூப்பர் தகவல்!
தனியார் வங்கியாக செயல்பட்டு வரும் ஆர்பிஎல் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.இந்த சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வந்துள்ளது.சேமிப்பு கணக்கில் வாடிக்கையாளர்களின் தினசரி இருப்பு தொகை அடிப்படையில் வட்டி விகிதமானது கணக்கிடப்பட்டு வட்டி தொகை செலுத்தப்படும்.மேலும் உயர்த்தப்பட்ட புதிய வட்டி விகிதத்தின் அடிப்படையில் ஒரு லட்ச ரூபாய் வரை 4.25 சதவீதம், ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை 5.50 சதவீதம், பத்து லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை 6 சதவீதம் ஆகும்.
அதனை தொடர்ந்து 6.50 சதவீதம் 3 கோடி முதல் ஐந்து கோடி வரை 6.50 சதவீதம் முதல், 7.5 கோடி வரை 6.50 சதவீதம், 10 கோடி முதல் 50 கோடி வரை 6.25 சதவீதம், 100 கோடி வரை 5.25 சதவீதம்,100 கோடி முதல் 200 கோடி வரை 6 சதவீதம் முதல் 400 கோடி வரை 6 சதவீதம் ,400 கோடி முதல் 500 கோடி வரை 5.25 சதவீதம்,மேலும் 500 கோடிக்கு மேல் 5.25 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் உயர்ந்துள்ளது.