ஆண்,பெண் அனைவரும் தங்கள் அந்தரங்க உறுப்பை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.அந்தரங்க பகுதியில் அதிக முடி,அழுக்கு மற்றும் கிருமிகள் இருந்தால் அவ்விடத்தில் அரிப்பு உணர்வு ஏற்படக் கூடும்.இந்த அரிப்பு பிரச்சனையை தொடர்ந்து சந்தித்து வருபவர்கள் உரிய வீட்டு வைத்தியத்தின் மூலம் அதற்கு தீர்வு காண்பது நல்லது.
அந்தரங்க பகுதியில் அரிப்பு ஏற்படக் காரணம்:
1)ஈஸ்ட் தொற்று
2)பாலியல் நோய்
3)மாதவிடாய்
4)பாக்டீரியா பரவல்
5)சுகாதாரமின்மை
வீட்டு வைத்தியம் 01:
*ஐஸ்கட்டி
*ஆப்பிள் சீடர் வினிகர்
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஐஸ்கட்டிகள் மற்றும் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்தால் அரிப்பு,எரிச்சல் நீங்கும்.
வீட்டு வைத்தியம் 02:
*தயிர்
*மஞ்சள் தூள்
ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி தயிர் மற்றும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.இதை பிறப்புறுப்பை சுற்றி அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு உலர விடவும்.பிறகு வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி அவ்விடத்தை சுத்தம் செய்யவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பிறப்புறுப்பு அரிப்பு,எரிச்சல் நீங்கும்.
வீட்டு வைத்தியம் 03:
*உப்பு
*தண்ணீர்
ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி கல் உப்பு போட்டு வெதுவெதுப்பான நீர் ஊற்றி கலந்து விடவும்.பிறகு இதை பிறப்புறுப்பு பகுதியில் ஊற்றி சுத்தம் செய்யவும்.இவ்வாறு செய்தால் அவ்விடத்தில் இருக்கின்ற அழுக்கு,கிருமிகள் அனைத்தும் நீங்கிவிடும்.
வீட்டு வைத்தியம் 04:
*வேப்பிலை
*தண்ணீர்
*மஞ்சள் தூள்
ஒரு கொத்து வேப்பிலையை சுத்தம் செய்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.இதை அந்தரங்க பகுதியில் தடவினால் அரிப்பு,எரிச்சல் நீங்கும்.