ஓயாமல் தலை அரிக்குதா? இந்த பொருளை தலையில் தேய்த்து குளித்தால் இனி அரிக்காது!!

Photo of author

By Divya

ஓயாமல் தலை அரிக்குதா? இந்த பொருளை தலையில் தேய்த்து குளித்தால் இனி அரிக்காது!!

Divya

நம் தலை முடியை பராமரிக்காவிட்டால் அரிப்பு ஏற்படக் கூடும்.தலையில் பொடுகு,அழுக்குகள் அதிகமானால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு அரிப்பு ஏற்படும்.இந்த தலை அரிப்பால் புண்கள்,முடி உதிர்வு,முடி சேதமாதல் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.எனவே தலை அரிப்பு பிரச்சனையை அலட்சியம் செய்யாமல் கீழ்கண்ட குறிப்புகளில் ஒன்றை பின்பற்றி சரி செய்து கொள்ளுங்கள்.

தலை அரிப்பிற்கான காரணங்கள்:

1)பொடுகு தொல்லை
2)அழுக்கு சேருதல்
3)சொரியாசிஸ்
4)பேன் ஈறு தொல்லை
5)பாக்டீரியா தொற்று

தலை அரிப்பை சமாளிக்கும் குறிப்புகள்:

*எலுமிச்சை

வாரம் இருமுறை எலுமிச்சை சாறை தலை முழுவதும் அப்ளை செய்து கைகளால் மசாஜ் செய்து குளித்து வந்தால் தலை அரிப்பு நீங்கும்.

*வேப்பிலை

தலையில் அழுக்கு,பாக்டீரியாக்கள் நிறைந்திருந்தால் அடிக்கடி அரிப்பு ஏற்படும்.இதை சரி செய்ய வேப்பிலையை அரைத்து தலையில் தடவி ஊறவைத்து குளிக்கலாம்.இப்படி செய்வதால் தலையில் அழுக்குகள் நீங்கிவிடும்.

*கற்றாழை ஜெல்

பிரஸ் கற்றாழை மடலில் இருந்து ஜெல் எடுத்து தலைக்கு தடவி குளித்து வந்தால் தலை அரிப்பு நீங்கும்.

*கடுகு எண்ணெய் மற்றும் பூண்டு

25 மில்லி கடுகு எண்ணையை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும்.அடுத்து ஒரு பல் பூண்டை பொடியாக நறுக்கி போட்டு சிறிது சூடாக்கி தலைக்கு அப்ளை செய்து வந்தால் அரிப்பு நீங்கும்.

*தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் வேப்பிலை போட்டு சூடாக்கி ஆறவைத்து தலைக்கு அப்ளை செய்து வந்தால் தலையில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.

*வேப்பம் பூ

தலைக்கு பயன்படுத்தும் எண்ணையில் வேப்பம் பூ சேர்த்துக் கொண்டால் அரிப்பு ஏற்படுவது கட்டுப்படும்.

*வெந்தயம்

தேங்காய் எண்ணையில் வெந்தயம் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலை அரிப்பு குணமாகும்.

*பொடுதலை

தேங்காய் எண்ணையில் பொடுதலை போட்டு கொதிக்க வைத்து ஆறிய பிறகு தலைக்கு அப்ளை செய்து வந்தால் அரிப்பு நீங்கும்.