காதில் கம்மல் போடும் பொழுது காயம் ஆகின்றதா? அதை ஆற வைக்க கடுக்காயை இப்படி பயன்படுத்துங்க!

Photo of author

By Rupa

காதில் கம்மல் போடும் பொழுது காயம் ஆகின்றதா? அதை ஆற வைக்க கடுக்காயை இப்படி பயன்படுத்துங்க!
பெண்கள் காதுகளில் கம்மல் அணிவது வழக்கம். தற்போதைய காலத்தில் ஆண்களும் ஸ்டைல் என்ற பெயரில் ஒரு காதில் மட்டும் கம்மல் அணிந்து வருகிறார்கள். அந்த வகையில் அதிகமாக பெண்கள் காதுகளில் கம்மல் அணிகிறார்கள்.
தங்கம், வெள்ளி, பிளாஸ்டிக், இரும்பு என்று வித்தியாசமான கம்மல்களை பெண்கள் அணிகிறார்கள். அவ்வாறு பெண்கள் விதவிதமான வடிவத்தில் கம்மல்களை அணியும் பொழுது சில சமயங்களில் அவர்களின் காதுகளில் புண் ஏற்படும். இந்த புண் ஆறுவதற்குள் பல வலிகள் ஏற்படும்.
இந்த புண்களை ஆற வைப்பதற்கு தனியாக மருத்துவ செலவு மருந்து செலவு என்று பணம் செலவாகும். எனவே பணம் செலவில்லாமல் கடுக்காயை மட்டும் பயன்படுத்தி காதில் ஏற்படும் புண்களை எவ்வாறு ஆற வைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* கடுக்காய்
* மஞ்சள் தூள்
செய்முறை…
முதலில் கடுக்காயை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த இந்த கடுக்காய் மஞ்சள் தூள் விழுதை காதில் புண் இருக்கும் இடத்தில் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் காதில் ஏற்பட்ட புண் விரைவில் ஆறிவிடும்.