கால் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தை அடைந்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றி பலன் பெறவும்.
தீர்வு 01:
பப்பாளி துண்டுகள்
பால்
ஒரு கீற்று பப்பாளி பழத்தை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போடவும்.பிறகு அதில் சிறிதளவு பால் சேர்த்து க்ரீம் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அதில் கால்களை 10 நிமிடங்களுக்கு ஊற விடவும்.பிறகு ஒரு பிரஷ் பயன்டுத்தி கால்களை தேய்த்து சுத்தப்படுவதும்.
அதன் பிறகு ஒரு காட்டன் துணியில் கால்களை துடைத்துவிட்டு பப்பாளி பேஸ்டை கால் முழுவதும் அப்ளை செய்து மசாஜ் செய்யவும்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கால்களை கழுவி துடைக்கவும்.இப்படி செய்வதால் கால்களில் உள்ள வெடிப்பு குணமாகும்.
தீர்வு 02:
தண்ணீர்
கல் உப்பு
ஒரு அகலமான பாத்திரத்தில் கால் பொறுக்கும் அளவு சூடான நீர் ஊற்றி சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து விடவும்.பிறகு அதில் கால்களை வைத்து ஒரு பிரஷ் கொண்டு சுத்தம் செய்யவும்.
அதன் பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தின் தோலை வைத்து பாத வெடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்தெடுக்கவும்.இப்படி செய்து வந்தால் பாத வெடிப்பு மறைந்துவிடும்.
தீர்வு 03:
மருதாணி
மருதாணி இலைகளை அரைத்து பாத வெடிப்பு இருக்கும் இடத்தில் பூசி வந்தால் சில நாட்களில் அவை மறைந்துவிடும்.
தீர்வு 04:
வேப்பிலை
மஞ்சள் தூள்
ஒரு கைப்பிடி வேப்பிலையை மிஸ்சியில் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.இதை பாதம் முழுவதும் அப்ளை செய்து பிறகு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும்.இதனால் சில தினங்களில் பாத வெடிப்பிற்கு தீர்வு கிடைத்துவிடும்.