உங்கள் வீட்டில் புத்தகங்கள் உள்ளதா.. இதோ தமிழக அரசு தரும் ரூ 3000 கிடைக்க உடனே இதை செய்யுங்கள்!!

Photo of author

By Rupa

 

Tamilnadu: வீடுகளில் நூலகம் வைத்திருப்பவர்களுக்கு பரிசு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசானது பெண்கள் மாணவர் மாணவிகள் என அனைவருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் புத்தகம் வாசிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் அதனை மக்களுக்கு கொண்டு சேரும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் இருப்பது அவசியம் என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. அவர்களை சிறப்பிக்கும் வகையில் தற்போது ரூ 3000 மதிப்புள்ள கேடயம் மற்றும் சான்றிதழ் உள்ளிட்டவை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வீடுகளில் நூலகம் வைத்திருப்பவர்கள், அதற்குரிய முழு விவரங்களை சென்னை மாவட்ட நூலக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்புபவர்களுக்கு இந்த பரிசு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக நீங்கள் அனுப்பும் விவரங்களின் எந்த வகையான புத்தகங்கள் உள்ளது? எத்தனை புத்தகங்கள் உள்ளது என்பது குறித்து முழு கணக்கீட்டுடன் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது சென்னை மாவட்டத்திற்கு மட்டும் இந்த அறிவிப்பு வெளியிட்ட நிலையில் நாளடைவில் எந்தெந்த மாவட்டத்தில் வீடுகள் தோறும் நூலகம் அமைத்துள்ளார்களோ அவர்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.